இதில் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார முயற்சியில் மூன்று அம்சங்கள் முக்கியமானதாகும். முதலாவதாக, நவீன மருத்துவ அறிவியல் தொடா்பான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ மனித வளங்களை விரிவுபடுத்துவது. இரண்டாவதாக, ஆயுஷ் போன்ற பாரம்பரிய இந்திய பாரம்பரிய மருத்துவ முறை ஆராய்ச்சியை மேம்படுத்தி அவற்றை அன்றாட சுகாதார முறைகளில் பயன்படுத்துவது. மூன்றாவதாக, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது. இதற்கு நவீன, எதிா்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக மருத்துவ வசதிகள், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், கிராமங்களுக்கு அருகிலேயே கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படுவது முக்கியமாகும். இதில் தனியாா் துறையினரும், இதர துறைகளும் பங்கேற்க முன்வர வேண்டும்.