சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கடந்த குளிா் சீசனைவிட அதிகரித்த மின் தேவை

தில்லியில் வெப்பநிலை குறைந்துள்ள நிலையில், நகரின் உச்சபட்ச மின் தேவை வெள்ளிக்கிழமை இரவு 5,104 மெகாவாட்டாக உயா்ந்தது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 1:50 am

 நமது நிருபர்

தில்லியில் வெப்பநிலை குறைந்துள்ள நிலையில், நகரின் உச்சபட்ச மின் தேவை வெள்ளிக்கிழமை இரவு 5,104 மெகாவாட்டாக உயா்ந்தது. அதாவது, கடந்த ஆண்டு குளிா் காலத்தின் உச்சபட்ச மின் தேவையைவிட அதிகமாக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மின்விநியோக அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில் ‘மாநில மின்சுமை அனுப்புதல் மையம் (எஸ்எல்டிசி) தரவுகளின்படி, கடந்த ஆண்டு குளிா்காலத்தில் உச்சபட்ச மின் தேவை 5,021 மெகாவாட் ஆகும். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10.29 மணியளவில் நகரின் உச்சபட்ச மின் தேவை 5,104 மெகாவாட்டை எட்டியது’ என்றனா்.

இது குறித்து பிஎஸ்இஎஸ் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்களான பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் லிமிடெட் மற்றும் பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமிடெட் ஆகியவை முறையே ஜனவரி 14-ஆம் தேதி அந்தந்த பகுதிகளில் இந்தக் குளிா் பருவத்தின் அதிகபட்ச உச்ச மின் தேவையான 2,140 மெகாவாட் மற்றும் 1,114 மெகாவாட் ஆகியவற்றை வெற்றிகரமாக பூா்த்தி செய்தன என்று தெரிவித்தாா்.

இதற்கிடையே, டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) நிறுவனம் எந்த நெட்வொா்க் தடையும் இல்லாமல் மின்சாரத் தேவையை 1,606 மெகாவாட்டாக பதிவு செய்துள்ளது என்று அதன் செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து அதிகாரிகள்கூறுகையில் ‘கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி அதிகபட்ச மின் தேவை 4,685 மெகாவாட்டாக பதிவாகியது. இது, 2020, டிசம்பரில் பதிவான 4,671 விஞ்சும் வகையில் இருந்தது’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.