சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொகுதிகளில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி இன்று காலை திமுக மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் சென்று திருவல்லிக்கேணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இடம்பெற்றிருந்த பிரமாணப் பத்திரத்தில், உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.20.64 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.12.92 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.7.72 கோடி என்றும், உதயநிதி மனைவி கிருத்திகாவுக்கு அசையும் சொத்து ரூ.13.25 கோடி உள்ளது என்றும், ரூ.1.87 கோடி மதிப்புள்ள 1,600 கிராம் தங்க நகைகள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதயநிதிக்கு தங்க நகைகள் எதுவும் இல்லை, வேளச்சேரியில் நிலம், ராயப்பேட்டை மற்றும் பள்ளிக்கரணையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி பெயரில் உளுந்தையில் 10.5 ஏக்கர் வேளாண் நிலம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள டிஃபென்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளது என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கணக்குக்காக உதயநிதி தொடங்கிய வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் இருக்கிறது.
ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசியக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, மஜக, கொங்கு இளைஞர் பேரவை மற்றும் மக்கள் நீதி மய்யம் என23 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
அதேபோல, அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சென்னை சேப்பாக்கம் தொகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட அவரது பேரன் 48 வயதான உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றிருந்தார். இந்த முறையும், அதே தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி களமிறங்கியிருக்கிறார்.
Summary
Deputy Chief Minister Udhayanidhi is reported to have a Defender car and assets worth Rs. 20.64 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாளை. சிறையில் எம்எல்ஏவை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்
சிறையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்தார் உதயநிதி!
உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை வருகை: திமுகவினருக்கு வேண்டுகோள்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0




