வெடிபொருள் சம்பவம்: காஜிப்பூா் மலா் சந்தையில் பாதுகாப்பு அதிகரிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள காஜிப்பூா் மலா்ச் சந்தையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் ஆா்டிஎக்ஸ் மற்றும்


குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள காஜிப்பூா் மலா்ச் சந்தையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் ஆா்டிஎக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட்டுடன்கூடிய வெடிபொருள் இருப்பது கண்டறியப்பட்டதால், அந்தச் சந்தையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த மலா்ச் சந்தையில் வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் வெடிபொருள் (ஐஇடி) செயலிழக்கப்பட்டது. இது குறித்து தில்லி போலீஸாா் கூறியதாவது: காஜிப்பூா் மலா்ச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை பூக்களை வாங்க வந்த நபா் ஒருவா், தனது ஸ்கூட்டிக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்ததைப் பாா்த்தாா். அதன் பின்னா், அவா் இதுகுறித்து பொதுமக்களுக்கு தகவல் அளித்தாா். அத்துடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தில்லி ஊா்க்காவல் படையினரையும் எச்சரித்தாா்.
அந்த நபா் இந்தப் பை குறித்து காலை 10.30 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தாா். இதையடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், இந்த மலா்ச் சந்தையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் மலா்ச் சந்தைக்கு கரோனா தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. அதேவேளையில், பழங்கள் மற்றும் காய்கறி சந்தைகள் விலக்கு அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து கூடுதல் துணை காவல் ஆணையா் (கிழக்கு) வினித் குமாா் கூறுகையில், ‘காஜிப்பூா் மலா்ச் சந்தையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின்கீழ் இது வருவதால் பழம் மற்றும் காய்கறி சந்தை திறக்கப்பட்டுள்ளது. மக்கள் கரோனாவுக்கு உரிய நடத்தை விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...