பிரதமர் மோடி வருகை: மீனம்பாக்கம், கிண்டியில் டிரோன்களுக்குத் தடை!
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

பிரதமர் மோடி
DPS

பிரதமர் மோடி
DPS
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி மீனம்பாக்கம் கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன் கேமரா ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் களம் தீவிரமடைந்த ஒரு மலையில் அந்தந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் புதுச்சேரியில் வரும் ஒன்பதாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய நாளை மதியம் 12.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.
சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கான் அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பிறகு அன்று மாலை புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்தடைந்து அன்று இரவு சென்னையில் தங்குகிறார்.
மேலும், தமிழகத்தில் 27 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளிவராத நிலையில் அதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. அப்போது தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், கூட்டணிக் கட்சிகளில் வெற்றிக்கு எவ்வாறு செயல்படுவது, தேர்தல் கள நிலவரம் என்ன என்பது குறித்து பாஜக உயர்நிலைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் நாளை மற்றும் நான்காம் தேதியில் பிரதமர் மோடி சென்னையில் தங்க இருப்பதால் சென்னை மற்றும் புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் மற்றும் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளைத் தவிர, ஏப்ரல் 3, 4 ஆகிய இரண்டு நாள்கள் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி பகுதிகளில் டிரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், 2023- ஆம் ஆண்டு, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழும், 2023ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14ன் உட்பிரிவு (2) கீழும், டிரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர் கிராஃப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட 24-03-2026 முதல் 22-05-2026, வரை தடைசெய்யப்பட்ட ஆணை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...