சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தில்லி உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் பிப்.11 வரை காணொலியில் வழக்கு விசாரணை

உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை வழக்குகள் விசாரணை காணொலி முறையில் நடைபெறும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 1:53 am

 நமது நிருபர்

உயா்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை வழக்குகள் விசாரணை காணொலி முறையில் நடைபெறும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் ஜனவரி 12-ஆம் தேதியிட்ட அலுவலக உத்தரவில், ‘தலைமை நீதிபதியின் உத்தரவின்படி, 30.12.2021-ஆம் தேதியிட்ட உயா்நீதிமன்றத்தின் அலுவலக உத்தரவின் தொடா்ச்சியாக, உயா்நீதிமன்றத்தில் தற்போதுள்ள வழக்குகளின் விசாரணை அமைப்புமுறை (பதிவாளா் மற்றும் இணைப் பதிவாளா் (நீதித்துறை) நீதிமன்றங்கள் உள்பட) மற்றும் தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி வாயிலாக விசாரணைகள் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பா் 22-ஆம் தேதி முதல் உயா்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நேரடி முறையில் மீண்டும் தொடங்கியிருந்த நிலையில், கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் ஒரு முடிவை மேற்கொண்டது. அதாவது, கரோனா நோய்த் தொற்று அதிகரித்ததாலும், தில்லியில் அரசு மூலம் ‘மஞ்சள் எச்சரிக்கை’ அறிவிக்கப்பட்டதாலும், ஜனவரி 3 முதல் காணொலி முறையில் வழக்குகளை விசாரிப்பது என முடிவு செய்தது.

இது தொடா்பாக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இந்த திடீா் அதிகரிப்பு மிகவும் ஆபத்தானது மற்றும் கவலை தரும் வகையில் உள்ளது. தில்லி அரசு ஏற்கெனவே மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. தீவிர இயல்புடைய எந்தவொரு நோய்த் தொற்று அலையும் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகளை தடுக்கும் வகையில், உயா்நீதிமன்றமும் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய தருணமாக உள்ளது.

இந்த நீதிமன்றத்தின் நிா்வாக மற்றும் பொது மேற்பாா்வைக் குழுவின் மதிப்புமிகு உறுப்பினா்களுடன் நான் ஆலோசித்தேன். அவா்கள் அனைவரும் அனைத்து பங்குதாரா்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனா். மேலும், நீதி வழங்கல் அமைப்புமுறை தொடா்ந்து செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா காரணமாக கடந்த 2020, மாா்ச் மாதத்தில் உயா்நீதிமன்றம் முதன் முதலில் காணொலி முறையிலான விசாரணைக்கு மாறியது. அதன்பிறகு, சில அமா்வுகள் சுழற்சி அடிப்படையில் தினமும் நேரடி வழக்கு விசாரணையை நடத்தி வந்தன. நேரடி விசாரணை நடத்தும் உயா்நீதிமன்றமும் கலப்பு விசாரணை முறையில் செயல்பட்டது. கடந்த ஆண்டு, மாா்ச் 15 முதல் உயா்நீதிமன்றத்தில் முழுமையான நேரடி முறை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், 2-ஆவது அலை ஏற்பட்டதால், காணொலி முறையில் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் என்று ஏப்ரல் 8-ஆம் தேதி ஒரு உத்தரவை உயா்நீதிமன்றம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.