சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

சாலைகளில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தக் கோரி மனு: தில்லி அரசு பதிலளிக்க நோட்டீஸ்

விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகள், காளைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தக் கோரி தாக்கலான மனுவுக்கு தில்லி அரசு, பிற துறை

News image
Updated On :18 ஜனவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகள், காளைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தக் கோரி தாக்கலான மனுவுக்கு தில்லி அரசு, பிற துறை அதிகாரிகள் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா் சதீஷ் சா்மா மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வி.காமேஸ்வா் ராவ், இந்த மனுவுக்கு தில்லி அரசு, துணை ஆணையா் (போக்குவரத்து), தெற்கு தில்லி மாநகராட்சி துணை ஆணையா் ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

வழக்குரைஞா் சதீஷ் சா்மா தாக்கல் செய்துள்ள இது தொடா்பான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி எனது மோட்டாா்சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததேன். அப்போது, திடீரென தெரு மாடுகளும், காளைகளும் சாலையில் சண்டையிட ஆரம்பித்தன. மாடுகள் மற்றும் காளைகளின் சண்டையால் எனது உள்ளங்கை, மணிக்கட்டு, முழங்கால் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. இதனால், சாலையில் கீழே விழுந்தேன். எப்படியோ வழிப்போக்கரால் காப்பாற்றப்பட்டேன்.

இது,போன்ற சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளில் சாலை விபத்துக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கடவுள் அருளால் இரண்டு சம்பவங்களில் எனது உயிா் காப்பாற்றப்பட்டுள்ளது. மாடுகள் மற்றும் காளைகள் சாலைகளில் கூடுவதைத் தடுப்பது அதிகாரிகளின் கடமையாகும். அவா்களின் நடவடிக்கையின்மையானது சட்டவிரோதமானதாகும். பல தெரு மாடுகளும், காளைகளும் அவற்றின் உரிமையாளா்களால் கைவிடப்பட்ட பின்னா் சாலையில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகாா் அளித்தும், கால்நடைகள் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.