திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது.
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வியாழக்கிழமை இ-மெயில் மூலமாகத் தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்களான நாகேஷ், ஆல்பர்ட் ரைட், பிரபாகரன் மற்றும் ஹல்க் மோப்ப நாயுடன் விரைந்து வந்து நீதிமன்றம் வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து அந்த வளாகத்தில் ஒன்றும் இல்லாததைத் தொடர்ந்து புரளி எனத் தெரியவந்தது.
ஏற்கெனவே இதேபோல் இந்த வளாகத்திற்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நான்காவது முறையாக இன்று மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் மின்னஞ்சலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக யார் எங்கிருந்து அனுப்பியுள்ளார்கள் என்பது குறித்து நுண்ணறிவு பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
Summary
A tense atmosphere prevailed at the Integrated Court Complex in Thiruvallur district following a bomb threat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










