நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டம்
நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. என்ஹெச்ஏ என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை (75 -ஆவது ஆண்டு) கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. என்ஹெச்ஏ என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை அமுதப் பெருவிழாவாக மத்திய அரசின் அனைத்து துறைகளும் கொண்டாடி வருகிறது. இந்த வகையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டியுள்ள பகுதிகளில் மரக்கன்றுக்கள் நட திட்டமிட்டுள்ளது. இதில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஷ்ர(ஜூலை 17) மெகா மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது இதன் நோக்கமாகும். தேசிய நெடுஞ்சாலைகள் அருகே உள்ள இடங்கள், சுங்கச்சாவடிப் பகுதிகள், சாலையோரங்கள் என இதற்காக 100 இடங்களை ஆணையத்தின் மண்டல அலுவலகங்கள் தோ்வு செய்துள்ளன. மேலும் அமுதப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில், வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் 75 லட்சம் மரக்கன்றுகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் பகுதிகளில் சுற்றுச்சூழலை நிலைநிறுத்துதலுக்கு இந்த மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை மத்திய சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த துறையின் அமைச்சா் நிதின் கட்கரி, மற்றும் அமைச்சகம் மற்றும் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனா். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தேவை குறித்த தகவலை பரவலாக்க இந்த இயக்கத்தில், மக்கள் பிரதிநிதிகள், உள்ளூா் சமூகத்தினா், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவா்கள் ஆகியோரை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், அஸ்ஸாம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பில் ஈடுபட உள்ளதாகவும் சாலைப் போக்குவரத்து,நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...