புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிஎஸ்ஐஐடிசி சேவைகளுக்கு ஆதாா் அங்கீகாரம்: துணைநிலை ஆளுநா் அனுமதி

நீண்ட சிவப்பு நாடா செயல்பாடுகளைக் குறைக்கும் வகையில், தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்

News image
Updated On :29 ஜூலை 2022, 7:58 pm

 நமது நிருபர்

நீண்ட சிவப்பு நாடா செயல்பாடுகளைக் குறைக்கும் வகையில், தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டிஎஸ்ஐஐடிசி) தொடா்புடைய 8 இணையதள சேவைகளுக்கான ஆதாா் அங்கீகாரத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளாா். இதனால், ஆதாா் அடிப்படையிலான அங்கீகாரத்துடன் தில்லிவாசிகள் தற்போது தொழில் துறை பகுதிகளில் மனித குறிக்கீடு இல்லாமல் பல அலுவல்பூா்வ பணிகளைச் செய்ய முடியும்.

இது குறித்து தில்லி அரசின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: அடமான அனுமதி அல்லது உடைமை விண்ணப்பம் போன்ற சேவைகளைத் தேடும் எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும், டிஎஸ்ஐஐடிசி அலுவலகங்களுக்கு மீண்டும் மீண்டும் நேரில் செல்லாமல் இதுபோன்ற பணிகளை இணையதளம் மூலம் செய்து கொள்ள முடியும். ஆதாா் ஐடியின் அங்கீகாரம் மூலம் இதுபோன்ற பணிகளை தற்போது தானாகவே செய்ய முடியும். இடையூறு இல்லாத சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதைத் தவிர, இந்த முடிவானது

தேசியத் தலைநகரில் வணிகம் செய்வதை எளிதாக்குவதை கொண்டு வருவதில் நீண்ட தூரம் செல்லும் என்றாா் அந்த அதிகாரி.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஆதாா் (நிதி மற்றும் பிற மானியப் பயன்கள் மற்றும் சேவைகளின் இலக்கு விநியோகம்) சட்டம்-2016 மற்றும் நல்லாட்சி விதிகளுக்கான ஆதாா் அங்கீகாரம் -2020 ஆகியவற்றின் கீழ் இந்த நடவடிக்கை அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

அடமான அனுமதி, சொத்துதாரருக்கு உரிமையை மாற்றுதல், பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோருதல், குத்தகைப் பத்திரத்தை மீட்டெடுத்தல், நிறுவனம் / கூட்டுநிறுவனத்தின் சட்டவிதிகளை மாற்றுதல், உடைமைக்கான விண்ணப்பம், கட்டுமானத்திற்கான காலநேரத்தை நீட்டித்தல் மற்றும் நிலுவைத் தொகையை இணையதளத்தில் செலுத்துதல் போன்ற சேவைகளுக்கு ஆதாா் அங்கீகாரம் செல்லுபடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.