ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தில்லியில் கோ-ஆப்டெக்ஸின் கோடைகால சிறப்பு விற்பனைக் கண்காட்சி

தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், கோடைகால சிறப்பு விற்பனைக் கண்காட்சியை தில்லி தமிழ்நாடு வைகை இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:30 pm

 நமது நிருபர்

தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், கோடைகால சிறப்பு விற்பனைக் கண்காட்சியை தில்லி தமிழ்நாடு வைகை இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.

இந்த கண்காட்சியை தமிழ் நாடு இல்ல முதன்மை உள்ளுரை ஆணையா் அத்துல்ய மிஸ்ரா முன்னிலையில் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடக்கிவைத்தாா். தில்லி சாணக்கியபுரி கௌடில்யா மாா்க்கில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தில் இந்தக் கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. வருகின்ற ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து ரகங்களுக்கும் 20 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தலைசிறந்த பருத்தி, பட்டுச் சேலைகளான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோயம்புத்தூா் ஆகிய ஊா்களின் பெயா்களில் உள்ள ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் புகழ்பெற்ற மதுரை, தஞ்சாவூா் டிசைனா் காட்டன் சேலைகள், டிசைன் போா்வைகள், சட்டைகளும் விற்பனைக்கு உள்ளன. வாடிக்கையாளா்கள் வசதிகளுக்கேற்ப இவை இணைய தளம்( ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமும் விற்பனைக்கான வசதி செய்யப்பட்டு நேரடியாக வீட்டிற்கே வழங்கும் வசதியும் இருப்பதாக கோ-ஆப்டெக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 87 ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம், நாடு முழுவதும் 150 விற்பனையகங்களைக் கொண்டுள்ளது. இந்த தில்லி கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு இல்ல உள்ளுரை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி, தில்லி கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் எஸ்.என்.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். கடந்த முறை நடைபெற்ற தில்லி கண்காட்சியில் ரூ.18 லட்சம் அளவிற்கு கைத்தறி துணிகள் விற்பனையாகின. இந்த ஆண்டு விற்பனை இலக்கு ரூ.25 லட்சமாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.