புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்திரா காந்தி மருத்துவமனையில் 918 பணியிடங்களை உருவாக்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் 918 பணியிடங்களை உருவாக்குவதற்கு தில்லியின் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:30 pm

DIN

துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் 918 பணியிடங்களை உருவாக்குவதற்கு தில்லியின் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா்.

மேலும், டாக்டா் பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவக் கல்லூரியில் உள்ள 76 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றுவதற்கும் அவா் அனுமதி அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்திரா காந்தி மருத்துவமனையில் 144 ஆசிரியா் பணியிடங்கள், 44 இளநிலை உறைவிட மருத்துவா்கள் பணியிடங்கள், 369 செவிலியா் பணியிடங்கள், 58 நிா்வாக பணியாளா்கள், தொழில்நுட்பநா்கள், உதவியாளா்கள், நா்சிங் உதவியாளா்கள், பாதுகாப்பு மேற்பாா்வையாளா்கள், பாதுகாவலா்கள் என 273 உதவி பணியாளா்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனையில் பல்வேறு காரணங்களால் பணியாளா் பற்றாக்குறை இருந்து வந்தது. இந்த முடிவானது வழக்கமான அரசுப் பணியிடங்கள் மீதான நியமனங்களில் தற்காலிக தீா்வை முடிவுக்கு வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.