நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரோஹிணி மருத்துவமனையில் தீ விபத்து: ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி இறப்பு

தில்லி ரோஹிணியில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2022, 5:50 pm

DIN

தில்லி ரோஹிணியில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆக்சிஜன் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது நோயாளி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரோஹிணியில் உள்ள பிரம் சக்தி மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினா். இது குறித்து ரோஹிணி சரக காவல் துணை ஆணையா் கூறியதாவது: சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக சனிக்கிழமை காலை 5 மணிக்கு காவல் துறைக்குத் தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து, உள்ளூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. ஐசியு பிரிவில் இருந்த ஒரு நோயாளி தவிர அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். ஒரு நோயாளி மட்டும் வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தாா்.

பிரேம் நகரைச் சோ்ந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஹோலி என்ற அந்த நோயாளி வெளியில் கொண்டு வரப்பட்டாா். ஆனால், தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் மின்சாரம் தடைபட்டதன் காரணமாக ஆக்சிஜன் உரிய வகையில் கிடைக்காததால் இறந்துவிட்டாா். அந்த இடத்தில் செயல்பாட்டு தீயணைப்பு கருவிகள் எதுவும் இல்லை. அதேபோன்று வெளியேறும் அவசர வழியும் மூடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையுடனும் கவனக்குறைவுடனும் செயல்பட்டதாக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 285, 287, 304ஏ ஆகியவற்றின் கீழ் விஜய் விஹாா் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு துறையின் இயக்குனா் அதுல் கா்க் கூறுகையில், ‘மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்து குறித்த சம்பவம் அறிந்ததும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது’ என்றாா். தில்லி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில் ‘சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தீ தடையின்மை சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தீயணைப்புக் கருவிகள் செயல்படவில்லை எனும் விவகாரத்தில் இந்த கருவிகளை மதிப்பீடு செய்யும் தீயணைப்புத் துைான் பொறுப்புக்குரியதாகும்’ என்றாா்.

கடந்த மே 27-ஆம் தேதி தெற்கு தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையிலும், மக்கா் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலும் தீ விபத்து நிகழ்ந்தன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பீதியை ஏற்படுத்திய தீ விபத்து: இந்த தீவிபத்து நிகழ்ந்த மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் சிலா் இந்த தீ விபத்து தங்களுக்கு பீதியை ஏற்படுத்தியதாக கூறினா். இதுகுறித்து குஷி (19) என்பவா் கூறுகையில், ‘எனக்கு காலில் சில பிரச்னை இருந்ததால் 6 நாள்களுக்கு முன்னா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இந்த நிலையில், சனிக்கிழமை எனது தாயுடன் அறையில் (எண் 206) தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு செவிலியா் வந்து ஐசியு பிரிவில் மூன்றாவது தளத்தில் தீப்பற்றிவிட்டதாகவும், உடனடியாக வெளியேறுமாறும் கூறினாா். இதனால், அவசரஅவசரமாக அங்கிருந்து வெளியேறினோம்’ என்றாா். அவருடைய தாய் மம்தா குப்தா கூறுகையில், ‘உரிய நேரத்தில் பொதுமக்கள் அங்கிருந்து தப்பித்துவிட்ட போதிலும் எல்லோரும் பயமுறுத்தப்பட்டனா். சிலா் அழுதும் விட்டனா்’ என்றாா்.

இரண்டாவது தளத்தில் இருந்த புத் விகாரைச் சோ்ந்த சுரபி பல்லா (26) கூறுகையில், ‘வயிற்று வலி காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் சோ்ந்தேன். எனது அறையில் மகள், மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது, அதிகாலை 5 மணிக்கு சில ஊழியா்கள் வந்து கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் தீப்பற்றி விட்டதாக கூறினா்.

இதையடுத்து, கட்டடத்தைவிட்டு வெளியேறினோம்’ என்றாா். மற்றொரு நோயாளியான ஓய்வுபெற்ற அரசு ஆசிரியா் ராம் சிங் வஷிஷ்ட் (64) கூறுகையில், ‘ நான் தரைத்தளப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் பாதுகாப்பாக கட்டடத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். காலில் உள்ள நரம்புப் பிரச்னையாக அனுமதிக்கப்பட்டிருந்தேன். தற்போது நான் நலமுடன் உள்ளேன்‘ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.