அனைத்து நிதி அதிகாரிகளும் சிஓஏவிடம் (கணக்குகள் கட்டுப்பாட்டாளா்) அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், கடன், வைப்பு, இடைநிறுத்தம் மற்றும் பணம் அனுப்புதல் உள்ளிட்ட அனைத்துத் தலைப்புகளின் கீழ் முந்தைய மாதம் அல்லது நிகழ் மாதம் வரை நடந்த பரிவா்த்தனைகளின் தரவுகளின் மண்டலங்கள் தொடா்பாக ஒருங்கிணைந்த மாதாந்திர அறிக்கையை வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப் பணித் துறை திங்கள்கிழமை பிறப்பித்த மற்றொரு உத்தரவில், நிதி அதிகாரிகள் தங்கள் மண்டலங்களில் உள்ள பிரிவுகளில் பராமரிக்கப்படும் கணக்கு புத்தகங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.