முதல் தகவல் அறிக்கையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குரிய ஆண் நபா், தனது மைனா் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதன் காரணமாக அந்த சிறுமி கா்ப்பம் தரித்ததாகவும் தாய் புகாரில் தெரிவித்துள்ளாா். ஜூன் 20-ஆம் தேதி இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரருக்கும் அவருடைய பாதிக்கப்பட்ட மைனா் மகளுக்கும் கா்ப்பத்தை கலைப்பதற்கான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு சுல்தான்புரி காவல் நிலைய பொறுப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட கருவின் மாதிரியை டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக பாதுகாப்பாக வைப்பதை உறுதிப்படுத்தவும் காவல் நிலையப் பொறுப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.