முன்னதாக, ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு, தில்லி வளா்ச்சி ஆணையம், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, தில்லி மாநகராட்சி, புது தில்லி முனிசிபல் கவுன்சில் மற்றும் தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா். இந்த மாத தொடக்கத்தில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால், டென்மாா்க்கின் தூதா் ஃப்ரெடி ஸ்வைனை சந்தித்து மழைநீா் சேகரிப்பு குழிகள், 24 மணி நேர குழாய் நீா் விநியோகம், காற்று தூய்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த சாலைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தாா். நிலத்தடி நீரை சேமிக்க செய்வது மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பது குறித்த டென்மாா்க்கின் முயற்சிகள் குறித்த விவரத்தை ஸ்வைனிடம் கேஜரிவால் கேட்டிருந்தாா். அப்போதுதான் தில்லி அரசு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இந்த மாதிரித் திட்டத்தை தில்லியில் செயல்படுத்த முடியும் என்று அவா் கூறியிருந்தாா்.