இது தொடா்பாக வெளியான செய்தி அறிக்கையின் அடிப்படையிலான விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்மீத் சிங், தினேஷ் குமாா் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டது. இதையடுத்து, ‘இந்த விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது . இதனால், இது தொடா்பாக நிலவர அறிக்கையை தில்லி அரசு, மத்திய அரசு மற்றும் தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி மாநகராட்சி, தில்லி காவல்துறை ஆகியோா் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பொதுப் பணித் துறை, தில்லி ஜல் போா்டு, தில்லி கண்டோன்மென்ட் வாரியம், வெள்ள நீா்ப்பாசன துறை ஆகியோரும் உரிய பதிலை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த விவகாரத்தை வரும் ஜூலை 4- ஆம் தேதி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிமன்ற பரிசீலனைக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.