எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கொழுப்பு பிரச்னையால் இந்திய ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்பு!

வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு சார்ந்த உடல் பருமன் பிரச்னை தொடர்பான ஆய்வு பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 9:15 am IST

இந்தியாவில் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு சார்ந்த உடல் பருமன் பிரச்னையால் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 முதல் 49 வயதுக்குள்பட்ட ஒவ்வொரு 10 இந்தியப் பெண்களில் 5 முதல் 6 பேருக்கு வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு பிரச்னை இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்வு, நகர்ப்புற வாழ்க்கைமுறை, அதிக வருமானம் காரணமாக ஏற்படும் உணவுப் பழக்க மாற்றங்கள் மற்றும் அதீத அசைவ உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

'நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி: மருத்துவ ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள்' என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கே இடுப்புச் சுற்றளவு பெரிதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் ஒரு ஆழமான அவசரநிலை பிரச்னை தொடர்பான அறிகுறிகள் தென்படுவதாக எச்சரித்துள்ளது. மேலும், இதில் பதின் வயதினர் மற்றும் இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது, ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.

வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதால் இதய நோய், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் கொழுப்பு நோய் (ஃபேட்டி லிவர்), வகை 2 நீரிழிவு நோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட சில புற்றுநோய்கள் உள்பட பல உடல் உறுப்புகள் சார்ந்த நோய்களுடன் தொடர்புடையதாக இருப்பதால், இவ்வகை உடல் பருமனை அளவிடுதல் பற்றிய அவசரத் தேவையை இந்த ஆய்வு தெரியப்படுத்துகிறது.

வெள்ளை இனத்தவர்களுடன் இந்தியர்களை ஒப்பிடுகையில், ஆசிய இந்தியர்கள் குறைந்த பி.எம்.ஐ. அளவில் அதிக உடல் கொழுப்பைக் கொண்டிருப்பதால், அவர்களின் உடல் பருமனை பி.எம்.ஐ. துல்லியமாகக் கணக்கிடுவதில்லை. எனவே, உடல் பருமனில் இருக்கும் கவனத்தை வயிற்றில் உள்ள கொழுப்பு சார்ந்த பருமனுக்கு மாற்ற வேண்டும்.

இதில், தோலுக்கு கீழும் கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளைச் சுற்றியும் உள்ள அதிகப்படியான கொழுப்பும் அடங்கும். இவை வளர்சிதை மாற்ற மற்றும் இதய நோய் தொடர்பான பிரச்னைகளின் முக்கியக் அறிகுறிகளாகும்

பி.எம்.ஐ. கணக்கீடுக்கு பதிலாக இதய வளர்சிதை பற்றிய பிரச்னைகளை மதிப்பிட இடுப்புச் சுற்றளவு மற்றும் இடுப்பு - உயர விகிதத்தைக் கணக்கிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வயிற்றில் சேரும் கொழுப்பு சார்ந்த உடல் பருமன் பிரச்னை நகர்ப்புறங்கள் அல்லது வசதி படைத்த மக்களிடையே மட்டுமின்றி கிராமப்புறங்களிலும், நடுத்தர மக்களிடமும் கூட அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2019-2021) தரவுகளின்படி

இந்தியாவில் சுமார் 40% பெண்களும், 12% ஆண்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Summary

More women than men in India face abdominal obesity, says study

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.