தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தினால், கொழுப்பு கரையும். நெல்லிக்காயுடன் இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து குடித்தால் மேலும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் நன்மையளிக்கும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டாலும் அல்லது அதன் சாறை 100 மில்லி அளவு அருந்தி வந்தாலும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலில் எந்த நோயும் வராது.
இஞ்சியை ஜூஸ் செய்தோ, துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், செரிமான பிரச்னைகள் வராது.
வாதத்தால் ஏற்படும் மூட்டு நோய்களுக்கு ஒரு தேக்கரண்டி மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால், அவை குணமாகும்.
கீரையை வேக வைக்கும் தண்ணீரில் சிறிது உப்பை கரைத்து, அதன் பின்னர் வேக வைத்தால் கீரையின் மணமும் நிறமும் அருமையாக இருக்கும்.
வெண்டைக்காயை வதக்குவதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி புளித்த மோரை சேர்த்தால், மொறுமொறுவென்று இருக்கும்.
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து எடுத்து நறுக்கினால் கண்ணீர் வராது.
ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெய் அல்லது இரண்டு பல் பூண்டு சேர்த்து பருப்பை வேக வைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.
துவரம் பருப்பு துவையல் தயாரிக்கும்போது சிறிது கொள்ளையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால், மணமாகவும் சுவையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் பூண்டையும் சேர்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசிலுக்கென ஒரு சத்தம் இருக்கு அதைத் தாண்டி சத்தம் வராது! - தமிழிசை

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!
வீட்டுக் குறிப்புகள்

கரும்பு ஜூஸ் போட்டும் ஆட்டோவில் பயணித்தும் முதல்வர் பிரசாரம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
