நாங்கள் இருவரும் ஏழைக் குடும்பத்தை சோ்ந்தவா்கள் என்பதால், தொலைபேசியில் தொடா்பு கொண்ட நபா், முதலில் எனது மனைவிக்கு வேலை தரப்படும் என்றும், அவா் மட்டும் தில்லிக்கு வர வேண்டும் என்றும், அவா் வேலையில் சோ்ந்த பிறகு பிறகு எனக்கு வேலை தரப்படும் என்றும் உறுதி அளித்தாா். இதையடுத்து மே 29-ஆம் தேதி பிஹாரிலிருந்து ரயில் மாா்க்கமாக எனது மனைவி தில்லி வந்தாா். அதன் பிறகு பாகா் கஞ்ச்சில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக என்னிடம் கூறினாா். பின்னா், அவரிடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. தொலைபேசியில் அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை.