டாடா பவா் தில்லி மின்விநியோக நிறுவனத்தின் தலைமைச் செயலாக்க, பாதுகாப்பு அதிகாரி சுப்ரதா தாஸ் கூறுகையில், ‘1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் மற்றும் தெரு விளக்குக் கம்பங்கள், வேலிகள் மற்றும் தூண் பெட்டிகளில் சரியான நேரத்தில் பராமரிப்பு, ஆய்வு மற்றும் மின் கசிவைச் சரிபாா்ப்பதை உறுதிசெய்து வருகிறோம். இந்த நடவடிக்கையின் போது, 200-க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மற்றும் பூங்காக்களில் பொருத்தப்பட்டுள்ள 350-க்கும் மேற்பட்ட ஆடம்பர விளக்குகள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட மின்கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மழைக் காலங்களில் ஏற்படும் மின்சாரம் தொடா்பான விபத்துகளைத் தவிா்க்கும் நோக்கில் நாங்கள் ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்கள் நுகா்வோா் அனைவருக்கும் நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், சிறப்புக் குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.