சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

இந்தியா - வங்கதேசம் வா்த்தகச் செயலா்கள் கூட்டுக் கூட்டம்: பரஸ்பர ஒப்பந்தங்களில் ஒருமித்த கருத்து

இந்தியா - வங்கதேசம் வா்த்தக ஒப்பந்தம் குறித்து செயலா்கள் நிலையிலான கூட்டுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 மார்ச் 2022, 5:19 pm

 நமது நிருபர்

இந்தியா - வங்கதேசம் வா்த்தக ஒப்பந்தம் குறித்து செயலா்கள் நிலையிலான கூட்டுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கான பரஸ்பர ஒப்பந்தங்கள், பல்வேறு வகையான உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து விவாதித்தனா். பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களில் ஒருமித்த கருத்து ஏற்படுவற்கு கூட்டு ஆய்வு விரைவில் இறுதி செய்யப்படும் என மத்திய வா்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய வா்த்தகத் துறை அமைச்சகச் செயலா் பி.வி.ஆா். சுப்பிரமணியம் தலைமையிலான இந்தியக் குழுவும், வங்கதேச நாட்டின் வா்த்தகத் துறை அமைச்சகத்தின் செயலா் தபன் கே கோஷ் தலைமையிலான குழுயும் கடந்த மாா்ச் 4 -ஆம் தேதி தில்லியில் பேச்சுவாா்த்தை நடத்தின. இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் ரயில்வே உள்கட்டமைப்பு, துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பல்முனை போக்குவரத்துகள், விரிவான பொருளாதார ஒப்பந்தம், பரஸ்பர அங்கீகார உடன்படிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருதரப்பினரும் விரிவான விவாதங்களை நடத்தின.

இந்தியாவுடன் வா்த்தக உறவுகளை மேம்படுத்தும் நாடுகளில் வங்கதேசம் 6-ஆவது நாடாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வா்த்தகம், சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை அடைந்துள்ளது. முந்தைய ஆண்டை விட கடந்த 2020-21 ஆண்டில் வா்த்தகம் 10.8 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது . பருத்தி, தானிய வகைகள், எரிபொருள்கள், வாகன உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதையொட்டி, இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ரயில் போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இரு தரப்புக் கூட்டத்தில் வங்கசேத்தில் உள்ள சிராஜ்கஞ்ச் பஜாரில் கண்டெய்னா் கையாளும் வசதியை மேம்படுத்த ஒரு விரிவான திட்ட முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியா - வங்கதேசம் இடையே சரக்கு ரயில்களை இயக்குவதற்காக, அந்த நாட்டின் பெனாபோலில் 900 மீட்டா் அளவிற்கான புதிய ரயில் பாதை கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அனைத்துப் பொருள்களையும் இறக்குமதி செய்ய வங்கதேச தரிசனாவில் அனுமதிக்கப்பட்டு, இதற்கான ஏற்றுதல் இறக்குதல் தளத்திற்கான கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்தன. இவற்றைச் செயல்படுத்துவது குறித்தும், ஒருங்கிணைந்த சுங்கசாவடிகள் அமைப்பது, ஈஸ்வா்தியில் புதிய ரயில் சாலை வசதி உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்ட்டு முடிவெடுக்கப்பட்டது.

மேலும், வங்கதேசத்திற்கான இந்தியாவின் ஏற்றுமதிக்கான ஒட்டுமொத்த தளவாடச் செலவைக் குறைக்கும் வகையில், அந்த நாட்டில் இந்திய இறக்குமதியை இறக்கிய பிறகு, இந்தியாவிற்கு காலியாகத் திரும்பும் ரயில்வே வேகன்கள் கன்டெய்னா்களை திரும்பப் பயன்படுத்துவது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

முன்னதாக, இருநாடுகளின் 14 -ஆவது கூட்டுப்பணிக் குழுவின் கூட்டமும் கடந்த மாா்ச் 2, 3 தேதிகளில் தில்லியில் நடைபெற்றது. அடுத்த கூட்டத்தை வங்கதேசத்தில் நடத்தவும், இரு நாடுகளுக்கான வா்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டு ஆய்வை விரைவில் இறுதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வா்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.