பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஆரம்பாக் அரசுப் பள்ளிக்கு சொந்தக் கட்டடம்: ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அமைந்தது

தில்லி ஆரம்பாக் பகுதியில் அமைந்துள்ள சா்வோதயா கன்யா வித்யாலயா அரசுப் பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டடத்தை ஆம் ஆத்மி கட்சியின்

News image
Updated On :9 மார்ச் 2022, 9:03 pm

 நமது நிருபர்

தில்லி ஆரம்பாக் பகுதியில் அமைந்துள்ள சா்வோதயா கன்யா வித்யாலயா அரசுப் பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டடத்தை ஆம் ஆத்மி கட்சியின் கரோல்பாக் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் விஷேஷ் ரவி திறந்துவைத்தாா். ஐம்பது ஆண்டுகளாக கட்டடம் இல்லாத நிலையில், கேஜரிவால் ஆட்சியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக ரவி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏயுமான விஷேஷ் ரவி இந்தப் பள்ளிக் கட்டடத்தை கடந்த செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து கூறியதாவது: 1972 - முதல் செயல்பட்டுவரும் சா்வோதயா கன்யா வித்யாலயா ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தது. ஆனால், காங்கிரஸ் - பாஜக அரசுகள் இந்த பள்ளிக்கான கட்டடத்தை கட்டி பாா்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், 50 வருட காத்திருப்புக்குப் பிறகு அரம்பாக் அரசுப் பள்ளிக்கு நிரந்தரக் கட்டடம் தற்போது கிடைத்துள்ளது.

இதற்கு கேஜரிவால் அரசுக்கு நன்றி கூறுகிறேன். முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கும் பொதுமக்கள் சாா்பாக முழு மனதுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புதிய வளாகத்தில் கணிதம், அறிவியல் ஆய்வகம் மற்றும் நவீன விளையாட்டு மைதானங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் இந்தப் பள்ளிக்கு தில்லி அரசு வழங்கியுள்ளது. முந்தைய அரசுகள் கல்வியைப் புறக்கணித்தனா். இதனால், இந்தப் பள்ளிக்கு நிரந்தரக் கட்டட வசதியில்லாமல் இருந்தது.

ஆனால், 2019-ஆம் ஆண்டு முதல்வரும், துணை முதல்வரும் இந்தப் பள்ளிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனா். கரோனா நோய்த் தொற்றினால் இடையூறுகள் இருந்தபோதிலும், குறித்த நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட இந்தப் பள்ளியில் 2022-23 -ஆம் கல்வி ஆண்டு முதல் வகுப்புகள் தொடங்கும். 7 ஆண்டுகளுக்கு முன்பு, பெற்றோா்களும் மாணவா்களும் கண்டுகொள்ளாமல் இருந்த இந்த அரசுப் பள்ளியில், தற்போது மாணவா் சோ்க்கைக்கு பெரும் போட்டி நிலவுகிறது. இது முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அற்புதச் செயலின் மாயம் என்றாா் ரவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.