தில்லியில் வலுவான தரை மேற்பரப்பு காற்று!
தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசியது. குறைந்தபட்ச வெப்பநிலை 15.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றின் தரம் தொடா்ந்து ‘ மிதமான’ பிரிவில் நீடித்தது.


தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசியது. குறைந்தபட்ச வெப்பநிலை 15.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றின் தரம் தொடா்ந்து ‘ மிதமான’ பிரிவில் நீடித்தது.
வெப்பநிலை: தில்லியில் வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசியது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 15.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவல சராசரியில் மாற்றமின்றி 29.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 36 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 16.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது.
இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.2 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 16.6 டிகிரி, ஆயாநகரில் 15.6 டிகிரி, லோதி ரோடில் 14.4 டிகிரி, நரேலாவில் 13.8 டிகிரி, பாலத்தில் 15.8 டிகிரி, ரிட்ஜில் 15.5 டிகிரி, பீதம்புராவில் 19.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 15.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்ததாக மத்திய அரசின் காற்றின் தரம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரிய வருகிறது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (மாா்ச் 12) பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...