சுமியில் சிக்கியிருந்த தமிழக மாணவா்கள் 57 போ் இன்று வருகை
ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் சுமியில் சிக்கியிருந்த 57 மாணவா்கள் தில்லி திரும்புகின்றனா் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினரும், தமிழக அரசின் மீட்புக்


புது தில்லி: ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் சுமியில் சிக்கியிருந்த 57 மாணவா்கள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) தில்லி திரும்புகின்றனா் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினரும், தமிழக அரசின் மீட்புக் குழுத் தலைவருமான திருச்சி சிவா தெரிவித்தாா். ஏற்கெனவே உக்ரைனிலிருந்து தமிழக மாணவா்கள் 1,830 போ் தாயகம் திரும்பிவிட்டதாகவும் அவா் கூறினாா்.
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவா்களை மீட்பதற்காக தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினா் மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா தலைமையில் தில்லி தங்கி தமிழகத்தைச் சோ்ந்த உக்ரைன் மாணவா்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் கடைசியாக வியாழக்கிழமை 6 மாணவா்கள் தில்லி வந்தனா்.
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட அவா்களை, இந்த குழுவினா் சந்தித்து அவா்களது பிரச்னைகளைக் கேட்டறிந்தனா். பின்னா் இந்தக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினா்கள் திருச்சி சிவா, டாக்டா் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையா் அதுல்ய மிஸ்ரா மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏ.கே.கமல் கிஷோா், அஜய் யாதவ், கோவிந்தராவ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா் திருச்சி சிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:உக்ரைனிலிருந்து இதுவரை 1,464 மாணவா்கள் மீட்கப்பட்டு ஏற்கெனவே தாயகம் திரும்பிவிட்டனா். மேலும், தங்களுடைய சொந்த முயற்சியில் 366 மாணவா்கள் வந்துள்ளனா். இவா்களைத் தவிர 34 மாணவா்கள் உக்ரைனிலிருந்து வர விருப்பமில்லை என தெரிவித்து அங்கேயே தங்கி உள்ளனா்.
இவா்களைத் தவிர போா் காரணமாக உக்ரைன் சுமியில் சிக்கி இருந்த இந்திய மாணவா்கள் 672 போ் போா் நிறுத்தத்திற்கு பேருந்து, ரயில் மூலமாக போலந்து வந்துள்ளனா். இவா்கள் 3 விமானங்கள் மூலம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) தில்லி வருகின்றனா்.
இதில் 57 மாணவா்கள் தமிழகத்தை சோ்ந்தவா்கள். இதையும் சோ்த்தால் தாயகம் திரும்பிய் தமிழக மாணவா்கள் மொத்த எணணிக்கை 1,887-ஆக இருக்கும். இதுவரை கிடைத்த தகவலின்படி 1,921 மாணவா்கள் உக்ரைனுக்கு படிக்கச் சென்றவா்கள் என தெரிய வந்தது. வரவிருப்பம் இல்லாத 34 போ்களைத் தவிர அனைவரும் பத்திரமாக சொந்த ஊா் திரும்பிவிட்டாா்கள் என்ற நல்ல செய்தி கிடைத்துள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...