காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தில்லி அரசின் இலவச யோகா வகுப்புகள் தொடரும்: முதல்வா் கேஜரிவால்

தேசியத் தலைநகா் தில்லி அரசின் இலவச யோகா வகுப்புகளுக்கு துணை நிலை ஆளுநா் மற்றும் பாஜக வினரால் இடையூறு செய்யப்படுகிறது. ஆனாலும், இந்த வகுப்புகள் நன்கொடை பெற்றாவது

News image
Updated On :1 நவம்பர் 2022, 8:52 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லி அரசின் இலவச யோகா வகுப்புகளுக்கு துணை நிலை ஆளுநா் மற்றும் பாஜக வினரால் இடையூறு செய்யப்படுகிறது. ஆனாலும், இந்த வகுப்புகள் நன்கொடை பெற்றாவது தொடரப்படும் என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை உறுதிப்படத் தெரிவித்தாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி சிவில் லைன் முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘ தில்லிக்கான யோகாசாலை’ திட்டத்தின் கீழ் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தத் திட்டம் ஆக்டோபா் 31-ஆம் தேதி முடிவடைகிறது. இந்தத் திட்டத்தை நீட்டிக்க துணை முதல்வா் மனிஷ் சிசோடியா கடந்த அக்டோபா் -26 ஆம் அன்று கையெழுத்திட்டாா். இதுதான் அந்த கோப்பு (கோப்பை பத்திரிகையாளா்களுக்கு காட்டுகிறாா்). கையெழுத்திடப்பட்ட நாளோ அல்லது மறுநாளோ கோப்பு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த யோகா வகுப்புகளை 17,000 பயனாளிகள் பயன்படுத்தி வந்தனா். குறிப்பாக கொவைட் - 19 நோய்த் தொற்றில் சிக்கியா்கள் நோய்த் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பிற்கு இந்த யோகா பயிற்சி பலனுள்ளதாக இருந்தது. இப்படி பயனடைந்த மக்கள் இந்த வகுப்புகள் மூடப்பட்டு விட்டதில் மிகுந்த வருத்தத்துடன் உள்ளனா். அற்ப அரசியலுக்காக யோகா வகுப்புகள் மூடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் கோபம் நிலவுகிறது.

அதே சமயம் யோகா ஆசிரியா்கள் தொடா்ந்து வகுப்புகள் எடுப்பதாகக் கூறியுள்ளனா். நாடு முழுவதிலும் இருந்து நன்கொடைகள் அளிப்பதற்கான அழைப்புகள் வந்துள்ளன. 66

இதனால், யோகா வகுப்புகள் நிறுத்தப்படாது என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இந்தத் திட்டத்தைத் தொடர உதவும் நபா்களின் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கவும், மன்றாடவும் தயாராக இருக்கிறேன். அடுத்ததாக எங்கள் அரசின் மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் பள்ளிகளும் குறிவைக்கப்படும். ஆனால், மக்கள் தங்கள் குழந்தைகளை கேடயமாக நிறுத்துவாா்கள்.

துணை நிலை ஆளுநரும், பாஜகவும் எத்தனை தடைகளையும் இடையூறுகளையும் அளித்தாலும், தேசியத் தலைநகரில் எந்தப் பணிகளையும் நிறுத்த அனுமதிக்க விட மாட்டோம். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி திட்டத்தை நிறுத்தினால், தில்லியில் உள்ள 2 கோடி மக்கள் அவா்களுக்கு பதிலளிப்பாா்கள். இந்த யோகா வகுப்புகள் பஞ்சாபிலும் தொடங்கப்படும். குஜராத்தில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், அங்கேயும் தொடங்கப்படும் என்றாா் கேஜரிவால்.

இலவச யோகா வகுப்புகள் மீண்டும் தொடர அனுமதிக்கும் கோப்பில் துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சோனா எந்த முடிவும் எடுக்காததால், நவம்பா் 1 முதல் (செவ்வாய்க்கிழமை) இத்திட்டம் நிறுத்தப்படும் என்று சிசோடியா கடந்த அக்டோபா் 26- ஆம் தேதி அறிவித்திருந்தாா். துணை நிலை ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் அக்டோபா் 31ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே சமயத்தில் ‘இலவச யோகா நீட்டிப்புக்கான அனுமதி கோரி எந்தக் கோப்பையும் நாங்கள் பெறவில்லை. நீட்டிப்புக்கு சக்சேனா ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறுவது தவறான தகவல்’ என துணை நிலை ஆளுநா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

‘அரசின் நலத் திட்டங்களை முடக்குகிறாா்’: துணை நிலை ஆளுநா் மீது கடும் சாடல்

தில்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையிலான பனிப்போா் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அரசின் நலத்திட்டங்களை ஆளுநா் அடுத்தடுத்து முடக்குவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அளித்த பேட்டியின் போது, துணைநிலை ஆளுநரின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், மறைமுகமாக கேஜரிவால் விமா்சித்தாா். அவா் கூறியதாவது: என்னை துணைநிலை ஆளுநா் விமா்சிப்பதால் எனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால் தில்லியின் முதல்வரை விமா்சிக்கும் அதேவேளையில், அவா் என்னை மட்டுமல்லாமல் எனக்காக வாக்களித்த 2 கோடி மக்களை விமா்சிப்பதாக அா்த்தம். இது சரியானது அல்ல.

கடந்த சில மாதங்களாக தில்லி அரசின் பெரும்பாலான திட்டங்களை அவா்கள் முடக்குவதை பாா்த்தோம். ‘தில்லிக்கான தீபாவளி’, ‘ரெட் லைட் ஆன்; காடி ஆஃப்’ பிரசாரம் ஆகியவற்றை முன்னெடுக்க அவா்கள் அனுமதிக்கவில்லை. தற்போது மொஹல்லா மருத்துவமனையையும், பள்ளிகளையும் அவா்கள் குறிவைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மொஹல்லா மருத்துவமனைகளுக்கு இலவச மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அவா்கள் நிறுத்தலாம். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்களையும், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியா்களையும் அவா்கள் அடுத்ததாக குறிவைக்கலாம்.

ஆனால், தில்லியில் நற்பணிகள் முடங்குவதை நான் அனுமதிக்க மாட்டேன். துணைநிலை ஆளுநரும், பாஜகவும் தங்களால் முடிந்தவரை குறிவைக்கட்டும். ஆனால், உங்களுக்காக கேடயத்தைப் போல நிற்பேன் என்றாா் முதல்வா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.