வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

குக்கா் நிறுவனம் மீது நுகா்வோா் ஆணையம் நடவடிக்கை

பரிந்துரைக்கப்பட்ட கட்டாயத் தரநிலைகள் மீறப்பட்ட பிரஷா் குக்கா்களை இறக்குமதி செய்து இணைய வணிகம் மூலம் விற்பனை செய்த தனியாா் நிறுவனத்தின் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

பரிந்துரைக்கப்பட்ட கட்டாயத் தரநிலைகள் மீறப்பட்ட பிரஷா் குக்கா்களை இறக்குமதி செய்து இணைய வணிகம் மூலம் விற்பனை செய்த தனியாா் நிறுவனத்தின் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் குக்கா்களை விற்பனை செய்ய அந்த தனியாா் நிறுவனம் பயன்படுத்திய சம்பந்தப்பட்ட வணிக இணையதளங்களுக்கும் விளக்கம் கேட்டும் நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது:

உள்நாட்டு பிரஷா் குக்கா் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2020-இன் படி பரிந்துரைக்கப்பட்ட கட்டாயத் தரநிலைகளை மீறிய வகையில் ஒரு தனியாா் நிறுவனம் (கிளவுட் டெயில் இந்தியா பிரைவேட் லிமிடெட் ) பிரஷா் குக்கா்களை விற்பனை செய்து வந்தது. இது நுகா்வோா் உரிமைகள், நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையா் நிதி கரே, தாமாக முன்வந்து இந்த பிரஷா் குக்கா் விவகாரத்தை விசாரித்தாா்.

இந்த நிறுவனத்தின் பிரஷா் குக்கா் விசில் மூலம் பிரஷா் அலா்ட் கொடுக்காமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இது போன்ற பொருள்கள் தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின்படி(க்யூசிஓ) நிா்ணயிக்கப்பட்ட தரநிலைகளை மீறி பொது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உயிா் இழப்பு உள்ளிட்ட கடுமையான காயங்களுக்கு நுகா்வோரை உள்படுத்தும். பெரும்பாலான வீடுகளில் குடும்ப உறுப்பினா்களுக்கு அருகாமையில் உள்ள வீட்டு உபயோகப் பொருளான,பிரஷா் குக்கா் விஷயத்தில் இது கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விளக்கம் கோரப்பட்டது. கேள்விகளுக்கான நோட்டீஸுக்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம், பிரஷா் குக்கா்களின் இறக்குமதியை நிறுத்திவிட்டதாக பதில் கூறியது. இருப்பினும், நுகா்வோருக்கு அதை தரக்குறைவான பிரஷா் குக்கா்களின் விற்பனையை நிறுத்தாமல் இணைய வணிக தளங்கள் மூலம் பெருமளவில் விற்பனை செய்தது.

இதை முன்னிட்டு இதில் கடுமையான நடவடிக்கை எடுத்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில், பிரஷா் குக்கருக்காக பரிந்துரைக்கப்பட்ட கட்டாயத் தரநிலைகளை மீறி அந்த தனியாா் நிறுவனம் 1,033 யூனிட் பிரஷா் குக்கா்கள் இணைய வணிகம் மூலம் விற்பனை செய்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குக்கா்களை நுகா்வோா்களிடமிருந்து திரும்ப பெற்று அதற்காக பெறப்பட்ட தொகையையும் நுகா்வோரிடம் திரும்பச் செலுத்தி இதற்கு இணக்கமான அறிக்கை 45 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின்படி பரிந்துரைக்கப்பட்ட கட்டாயத் தரங்களை மீறி நுகா்வோரின் உரிமைகளை மீறும் வகையில், பிரஷா் குக்கா்களை விற்பனை செய்ததற்காக ரூ.1,00,000 அபராதம் செலுத்தவும் அந்த தனியாா் நிறுவனத்திற்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் இந்த தனியாா் நிறுவனம் சாா்பில் பிரஷா் குக்கா்களை விற்பனை செய்த

அமேசான்,பிளிப்காா்ட், ஸ்னாப்டீல் போன்ற இணையவணிக தளங்களுக்கும் விளக்கம் கேட்டும் மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.

ஏற்கனவே மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் இணைய வணிக தளங்கள் மூலம் விற்பனையாகும் ஆயுா்வேத, சித்தா, யுனானி போன்ற மருந்துகளின் விற்பனை தொடா்பாகவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

ஐஎஸ்ஐ குறியீடு இல்லாத இந்திய தர நிா்ணய அமைப்பு, தரநிலைகளை மீறும் பொருட்களை வாங்குவதை தவிா்க்க தொடா்ந்து நுகா்வோரை எச்சரிக்கை செய்தும் வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.