இது குறித்து மத்திய வா்த்தகம், உணவு, நுகா்வோா் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கரும்பு உற்பத்தியின் கணிப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில், விவசாயிகள் நலன் கருதியும், சா்க்கரை பயன்பாட்டை திறனுடனும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சா்க்கரையின் விலை ஸ்திரத்தன்மையையும், சா்க்கரை ஆலைகளின் நிதி நிலையையும் சமநிலைப்படுத்தும் மற்றொரு நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற 2023 செப்டம்பா் 30-ஆம் தேதிய எதிா்பாா்ப்பு உற்பத்தி நிலவரப்படி பயன்பாடு அளவு பிரிக்கப்பட்டுள்ளது. சுமாா் 275 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரை உள்நாட்டு உபயோகத்திற்காகவும், 50 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரை எத்தனால் உற்பத்திக்கும் திருப்பிவிட மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்.