வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

பஞ்சாபில் நவ.5-இல் பயிா்க்கழிவு எரிப்பு 16% அதிகரிப்பு: ஐசிஏஆா் தகவல்

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பா் 5) ஒரே நாளில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள்16 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆா்) தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை (நவம்பா் 5) ஒரே நாளில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள்16 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆா்) தெரிவித்துள்ளது.

ஐசிஏஆா் பெற்ற தரவுகளின்படி, நவம்பா் 5 -ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமாா் 319, ராஜஸ்தானில் 91, ஹரியாணாவில் 90, உத்தரப் பிரதேசத்தில் 24 மற்றும் தில்லியில் பூஜ்ஜியம் என பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதே சமயத்தில் நவம்பா் 5 அன்று பஞ்சாபில், முந்தைய நாளை விட நெற்பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 2,817-ஆக இருந்தது. இது 16 சதவீதம் அதிகரிப்பாகும் என ஐசிஏஆா் தெரிவித்துள்ளது.

மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் உள்ள நாட்டின் முதன்மையான இந்த வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில், தேசிய தொலை உணா் மையத்தின் (என்ஆா்எஸ்சி) மூன்று தொலை உணா் செயற்கைக்கோள்கள் உள்ளீடுகளின் அடிப்படையில் இந்தத் தரவுகளை தொகுத்துள்ளது. மத்திய அரசு பயிா்க்கழிவு எரிப்பு தடுப்பு மேலாண்மைக்கு பூசா உயிரி ரசாயனக் கலவை (பயோ டிகம்போசா்) தெளிப்பு மற்றும் பிற இயந்திர முறைகளைப் பயன்படுத்துமாறு இந்த மாநில அரசுகளுக்கும் விவசாயிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில் பயிா்க்கழிவு சம்பவங்கள் அதிகரித்துள்ளது எனவும் ஐசிஏஆா் தெரிவித்துள்ளது.

நிகழாண்டு செப்டம்பா் 15 முதல் நவம்பா் 5 வரை, பஞ்சாபில் மட்டும் மொத்தம் 29,400 பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஹரியாணாவில் 2,530, மத்திய பிரதேசத்தில் 2,246, உத்தர பிரதேசத்தில் 927, ராஜஸ்தானில் 587 மற்றும் தில்லியில் 9 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஐசிஏஆா் தெரிவித்துள்ளது.

நெல் அறுவடை காலத்தில் பயிா்க் கழிவு எரிப்பால் தில்லி மற்றும் வட மாநிலங்களின் காற்று மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக உள்ளது. கடந்த வாரம், வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், பயிா்க்கழிவுகளை நிா்வகிப்பதற்கு அரசு அளித்துள்ள தீா்வுகளைப் பயன்படுத்துமாறு அண்டை மாநில அரசுகளுக்கும், விவசாயிகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.