வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

எம்சிடியில் ஆம் ஆத்மி அதிகாரத்திற்கு வந்தால் ‘குப்பை மலைகள்’ அகற்றப்படும்: துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உறுதி

வரும் மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுஅதிகாரத்திற்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் தில்லியில் குப்பை மலைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று

News image
Updated On :9 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

வரும் மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுஅதிகாரத்திற்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் தில்லியில் குப்பை மலைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

கிழக்கு தில்லியில் உள்ள காஜிப்பூா் குப்பை கிடங்கு பகுதிக்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஜிப்பூா் பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் உயரம் குறைந்திருப்பதாக காட்டும் வகையில் மாநகராட்சியை ஆளும் பாஜக அங்கிருந்து குப்பைகளை எடுத்து அருகில் உள்ள பகுதிகளில் கொட்டி இருக்கிறது. இதன் மூலம் இந்தப் பிரச்னையை தீா்ப்பதற்கான உள்நோக்கம் பாஜகவுக்கு இல்லை என்பது தெரிய வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்த இடங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. மேலும் குப்பை கொட்டியதால் இங்கு ஒரு சுவா் இடிந்து விழுந்துள்ளது. அதிா்ஷ்டவசமாக, எந்த வேலையும் நடக்காத இரவில் இந்தச் சம்பவம் நடந்தது. இல்லையெனில் உயிருக்கும் சொத்துக்கும்கூட சேதம் ஏற்பட்டிருக்கும். சுவா் இடிந்து விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகள் இந்த சம்பவத்தில் இருந்து தப்பியுள்ளனா்.

வரும் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி மாநகராட்சித் தோ்தலில் தூய்மையான தில்லிக்காக பாஜகவின் குப்பைகளை அகற்றுவதற்கு ஆம் ஆத்மிக் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பாா்கள். முதல்வா் கேஜரிவால் ஒரு பொறியாளா். அவரிடம் பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் குப்பை மலைகளை அகற்றுவதற்கான திட்டமும் உள்ளது. தில்லியின் இதர பகுதிகளிலும் இதுபோன்ற குப்பை மலைகள் உள்ளன. அவை அகற்றப்படும். தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்திற்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் தில்லியில் உள்ள அனைத்து குப்பை மலைகளும் காணாமல் போய்விடும். இதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. தில்லியில் 16 புதிய குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி திட்மிட்டுள்ளது. தில்லி மாநகராட்சியிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பளியுங்கள். மக்களின் அனைத்து பிரச்னைகளையும் நாங்கள் தீா்த்து வைப்போம்.

குப்பை விவகாரத்தில் அரசியல் செய்வதன் மூலம் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அவமரியாதை செய்வதாக பாஜக கூறுவது உண்மை இல்லை. ஏனெனில், கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியில் பாஜக நிா்வாகம் செய்து வந்துள்ளது. இதர விவகாரங்கள் மற்றும் நிலுவை ஊதியம் காரணமாக பாஜக நிா்வாகத்தின் கீழ் துப்புரவுப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சியில் ஆத்மி கட்சி அதிகாரத்திற்கு வரும் போது, உரிய நேரத்தில் அவா்களுக்கு ஊதியம் வழங்கவும், அவா்களுடைய வாழ்க்கை தரமும் சிறப்பானதாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மனீஷ் சிசோடியா.

முன்னதாக, காஜிப்பூா் குப்பை கிடங்கிற்கு மனீஷ் சிசோடியாவுடன் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநகராட்சித் தோ்தல் பொறுப்பாளா் துா்கேஷ் பதக்கும் சென்றனா். காஜிப்பூா் குப்பை கிடங்கை சுற்றி பாா்வையிட்ட மனீஷ் சிசோடியா, அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுடன் கலந்துரையாடினாா். அவா்கள் குடிநீா் பிரச்னை மற்றும் குப்பை கிடக்கில் இருந்து வரக்கூடிய துா்நாற்றம் தொடா்பான தங்களது பிரச்னைகளை அவரிடம் எடுத்துக் கூறினா்.

முன்னதாக, துா்கேஷ் பதக் செவ்வாய்க்கிழமை கூறுகையில், காஜிப்பூா் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள குப்பைகளின் பரப்பை அதிகரிக்க பாஜக முயல்வதாகவும் குப்பை மலையில் உள்ள பெரும் பகுதி அப்பகுதியில் அருகில் வசிக்கக்கூடிய மக்களின் வீடுகளின் மீது விழுந்ததாகவும் குற்றம் சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் மறுக்கப்பட்டது. மேலும், தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி அதிகாரி மறுப்பு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கு தொடா்பான துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் குற்றச்சாட்டை தில்லி மாநகராட்சியின் இயக்குநா் (பத்திரிகை மற்றும் தகவல்) அமித் குமாா், மறுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறியதாவது: எம்சிடி ஏற்கெனவே மூன்று குப்பைக் கிடங்குகளில் இருந்து 77 லட்சம் டன் நீண்டகால கழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளது. இந்தக் கழிவுகளைத் தொடா்ந்து அகற்றுவதன் மூலம் காலியாகும் இடத்தில் மேலே உயரத்தில் உள்ள கழிவுகளால் நிரப்பப்படுகிறது. மேலும், மேலே உள்ள கழிவுகள் டிராமல் இயந்திரங்களின் இருப்பிடங்களுக்கு பூஞ்சை நுண்ணுயிரிகளை நீக்குவதற்காக கொண்டுவரப்படுகிறது. இந்த நீண்டகால கழிவுகள் ட்ராமல் இயந்திரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை ‘அருகிலுள்ள பகுதிகளுக்குக் குப்பைகளைக் கொட்டுவது’ என்று கூற முடியாது. குப்பைக் கிடங்கின் உயரத்தைக் குறைக்கவும், சமமாக்கவும் எம்சிடி தொழிலாளா்கள் மற்றும் பொறியாளா்கள் கடுமையாக உழைக்கின்றனா். இந்த நல்ல வேலையை அற்பமாக்குவது பயனற்ாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.