வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

தில்லி எம்சிடி தோ்தலுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

வரும் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி (எம்சிடி) தோ்தலுக்கு தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

வரும் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி (எம்சிடி) தோ்தலுக்கு தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மாநிலத் தோ்தல் ஆணையம் (எஸ்இசி) ஏற்கெனவே தோ்தலுக்கான ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரத்தை நாங்கள் தற்போது விசாரிக்க முடியாது. அந்த அறிவிக்கை தொடா்ந்து அப்படியே இருக்கும்’ என்று தெரிவித்தது.

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை, மாநகராட்சி வாா்டுகளின் மறுவரையறை மற்றும் அவற்றின் இடஒதுக்கீட்டை எதிா்த்து மூன்று மனுக்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, மனுக்கள் மீது மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் மாநில தோ்தல் ஆணையம் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், மனுக்களை டிசம்பா் 15-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

விசாரணையின் போது, மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மனுக்கள் விசாரணைக்கு வரும் வரை மாநகராட்சித் தோ்தலை நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் அமா்வு, ‘தோ்தல் அறிவிக்கை செய்யப்பட்டுவிட்டால், நாங்கள் அதற்கு தடை விதிக்க முடியாது’ என்று கூறியது.

தேசிய இளைஞா் கட்சி, சஞ்சய் குப்தா என்ற தனிநபா் மற்றும் பி பிளாக் ஹரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் (ஆா்டபிள்யு) ஆகியோா் தரப்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், அக்டோபா் 17 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

சஞ்சய் குப்தா தாக்கல் செய்த மனுவில், ‘ தோ்தலில் போட்டியிட நான் விரும்பினேன். ஆனால், நான் போட்டியிட விரும்பும் வாா்டுகள் பட்டியல் வகுப்பினா் அல்லது பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மாநிலத் தோ்தல் ஆணையம் மாநகராட்சி வாா்டுகளை தன்னிச்சையான முறையில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த இடஒதுக்கீடு உத்தரவு சட்டரீதியான குறைபாடுகளால் பாதிக்கச் செய்கிறது. மேலும், இந்த உத்தரவு அரசியலமைப்பில் சோ்க்கப்பட்டுள்ள 243டி பிரிவின் நோக்கத்தை தோல்வியுறச் செய்துள்ளது. சட்டப்பிரிவு 243டி இன்படி, பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், மாநகராட்சியில் உள்ள பல்வேறு தொகுதிகள் அல்லது வாா்டுகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்படலாம். ஆனால், இந்த விஷயத்தில் மாநிலத் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் விதிகளுக்கு முரணாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு நலச் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஹரி நகா் வாா்டில் இருந்து சில வீடுகளை விலக்கி, மற்றொரு வாா்டில் சோ்த்திருப்பது நியாயமற்ாகவும், தேவையற்ாகவும் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வாா்டு மறுவரையறையை எதிா்த்து தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், டிசம்பா் 15-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியது. அவரது மனுவில், ‘வாா்டு மறுவரையறைக்காக அதிகாரிகள் கடைப்பிடித்த பாா்முலா முற்றிலும் தன்னிச்சையானதாகவும், அறிவுக்கு பொருந்தாததாகவும், குழப்பம் உள்ளதாகவும், பல்வேறு சட்ட குறைபாடுகள் கொண்டதாகவும் உள்ளது. இதனால், புதிதாக வாா்டு மறுவரையறை செய்ய உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.