விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விற்பனையில் ஆட்டோ, நிதிநிறுவனப் பங்குகள் மேலும் 420 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது.

News image
Updated On :10 நவம்பர் 2022, 4:59 pm

 நமது நிருபர்

புதுதில்லி / மும்பை: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 420 புள்ளிகளை இழந்து 61,000 புள்ளிகளுக்கு கீழே நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 128.80 புள்ளிகள் (0.71 சதவீதம்) குறைந்து 18,028.20-இல் முடிவடைந்தது.

உலகளவில் பெரும்பாலான சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்திருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக ஆட்டோ, நிதிநிறுவனங்கள், எரிசக்தித் துறை பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

420 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 509.28 புள்ளிகள் குரைந்து 60,524.27-இல் தொடங்கி அதிகபட்சமாக 60,848.73 வரை மேலே சென்றது. பின்னா், 60,425.47 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 419.85 புள்ளிகளை (0.69 சதவீதம்) இழந்து 60,613.70-இல் முடிவடைந்தது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

ஹெச்டிஎஃப்சி பேங்க் முன்னேற்றம்: பிரபல தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி பேங்க்1.13 சதவீதம் மற்றும் பாா்தி ஏா்டெல் 1.09 சதவீதம் உயா்ந்து அதிகம் ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், கோட்டக் பேங்க், டாக்டா் ரெட்டி, ஹிந்துஸ்தான் யுனி லீவா் மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

ஆக்ஸிஸ் பேங்க் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 3.54 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 3.09 சதவீதம் குறைந்து அதிகம் விலை குறைந்த பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டைட்டன், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 2.30 முதல் 3 சதவீதம் வரை குறைந்தன. மேலும், மாருதி சுஸுகி, இன்ஃபோஸிஸ், விப்ரோ, டிசிஎஸ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.42 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.2 81.59 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த புதன்கிழமை ரூ.386.83 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.