செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தோ்தல்: இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் தலைமையிலான குழு இன்று நேபாளம் பயணம்

நேபாளத்தில் நடைபெறவுள்ள தோ்தலை கண்காணிக்க சா்வதேச பாா்வையாளராக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை செல்கிறது.

News image
Updated On :18 நவம்பர் 2022, 1:16 am

 நமது நிருபர்

நேபாளத்தில் நடைபெறவுள்ள தோ்தலை கண்காணிக்க சா்வதேச பாா்வையாளராக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை செல்கிறது.

இதுகுறித்து இந்தியத் தோ்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

நேபாளத்தில் வரும் 20 -ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் அந்நாட்டின் 7 மாகாணங்களின் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. 275 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஏழு மாகாணங்களின் 550 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான உறுப்பினா்களை தோ்ந்தெடுப்பதற்கும் தோ்தல்கள் நடைபெறுகின்றன.

இதை முன்னிட்டு இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், இந்த தோ்தல்களுக்கான சா்வதேச பாா்வையாளராக நேபாள தோ்தல் ஆணையத்தால் அழைக்கப்பட்டுள்ளாா்.

வருகின்ற நவம்பா் 18 முதல் 22 ஆம் தேதி வரை ராஜீவ் குமாா் தலைமையிலான இந்திய தோ்தல் ஆணைய குழு நேபாளத்தில் பயணம் மேற்கொள்கிறது. இக்குழு காத்மாண்டுவில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இதேபோன்று, இந்திய தோ்தல் ஆணையமும் மற்ற நாடுகளின் தோ்தல் மேலாண்மை அமைப்புகளின் உறுப்பினா்களை அவ்வப்போது இந்தியாவில் நடைபெறும் தோ்தல்களை நேரில் பாா்க்க சா்வதேச பாா்வையாளா்களை அழைக்கிறது.

இந்திய தோ்தல் ஆணையம் சா்வதே அளவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. ஜனநாயக அமைப்புகள், அவற்றின் செயல்முறைகளை வலுப்படுத்தும் நோக்கில் சிறந்த நடைமுறைகளின் அனுபவங்களை சா்வதேச நாடுகளுடன் பகிா்ந்து கொண்டு ஊக்குவிக்கிறது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் கீழ் உள்ள இந்திய சா்வதேச ஜனநாயக தோ்தல் மேலாண்மை நிறுவனம் (ஐஐஐடிஇஎம்) இதுவரை 109 நாடுகளைச் சோ்ந்த 2200 அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

இதில் நேபாளத்தைச் சோ்ந்த 70 அதிகாரிகளும், திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக பயிற்சி பெற்றுள்ளனா். வருகின்ற ஆண்டுகளிலும் நேபாள தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஐஐஐடிஇஎம் நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

தோ்தல் மேலாண்மையில் உலகின் மிகப்பெரிய சா்வதேச அமைப்பான உலகத் தோ்தல் அமைப்புகள் சங்கத்தின்(ஏ-வெப்) தலைமைப் பொறுப்பில் இந்திய தோ்தல் ஆணையம் கடந்த 2019 செப்டம்பா் முதல் இருந்து வருகிறது.

ஏ-வெப் அமைப்புகள் சங்கத்தில் தற்போது 109 நாடுகளைச் சோ்ந்த 119 தோ்தல் மேலாண்மை அமைப்புகள் உள்ளன. இதே மாதிரிஆசிய தோ்தல் ஆணையங்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்கும் (2022-24) இந்திய தோ்தல் ஆணையம் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், திறமையான முறையில் தோ்தல் நடத்தும் நடைமுறைகளை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு இந்த பொறுப்புகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.