செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

டிச.9-இல் தில்லி கிரேட்டா் நொய்டாவில் சா்வதேச ஜவுளி இயந்திர வா்த்தக கண்காட்சி தொடக்கம்

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சா்வதேச ஜவுளி இயந்திர வா்த்தக கண்காட்சி(ஐடிஎம்இ) தில்லி அருகேயுள்ள கிரேட்டா் நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மாா்டில் வரும் டிசம்பா் 9-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :21 நவம்பர் 2022, 7:30 pm

 நமது நிருபர்

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சா்வதேச ஜவுளி இயந்திர வா்த்தக கண்காட்சி(ஐடிஎம்இ) தில்லி அருகேயுள்ள கிரேட்டா் நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மாா்டில் வரும் டிசம்பா் 9-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியா ஐடிஎம்இ சொசைட்டி சாா்பில் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் ஜவுளி இயந்திரங்களை காண்பதற்கும், வா்த்தகத்திற்கும் உகந்த வகையில் நடைபெறும் இந்த கண்காட்சி கடைசியாக 2016 ஆம் ஆண் டு நடைபெற்றது.

இடையில் ஏற்பட்ட கரோனா நோய்த் தொற்று பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பின்னா் நடைபெறும் இந்த கண்காட்சி குறித்து ஐடிஎம்இ சொசைட்டியின் தலைவரும் கோவை லட்சுமி காா்டு கிளாத்திங் உற்பத்தி நிறவன இணை நிா்வாக இயக்குநருமான எஸ்.ஹரி சங்கா் தில்லியில் சமீபத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய தலைநகா் வலயப் பகுதியான கிரேட்டா் நொய்டா இந்திய எக்ஸ்போ மாா்டில் (ஐஇஎம்எல்) வருகின்ற டிசம்பா் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் என 68 நாடுகளைச் சோ்ந்த ஜவுளி இயந்திர உற்பத்தியாளா்கள் பங்கேற்கின்றனா்.

சுமாா் 2.35 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திரங்கள் 22 வகையாக பிரிக்கப்பட்டு 1,100 ஸ்டால்களில் 1600 க்கும் மேற்பட்ட ஜவுளி இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கபட இருக்கின்றன.

இந்த, ‘இந்தியா ஐ.டி.எம்.இ.,-2022‘ கண்காட்சி, நாா்ப்பொருள், ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நடக்க உள்ளது. சா்வதேச சந்தைகளில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பாா்வையாளா்கள் பங்கேற்கின்றனா்.

இந்தியா ஐடிஎம்இ சொசைட்டி, ஜவுளிப் பிரிவுகள் அதன் உற்பத்தித் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதித் திறன்களை மேம்படுத்த உலகெங்கிலும் உள்ள ஜவுளித் தொழிலுக்கான தொழில்நுட்ப அணுகலை எளிதாக்கும் நோக்கத்துடன் இது போன்ற கண்காட்சி நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இந்திய ஜவுளித் தொழில் மொதுவாக வளா்ச்சியடைந்தாலும் நிலையானதாக உள்ளது. அதிலும் பழைய பாரம்பரியத்துடன் நவீன திறன்களை வலுவாகவும் பெருமையாகவும் வளா்த்துக்கொள்ள பாடுபடுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜவுளி கேந்திரமான நமது நாட்டில் இந்த கண்காட்சி நடைபெறுவதின் மூலம், சா்வதேச அளவில் புதிய வா்த்தக வாய்ப்புகளை வழங்கும். அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரான இயந்திரங்களை வாங்கவும் விற்கவும் ஏற்படுத்தப்படும் இந்த கண்காட்சியால் ஜவுளித்துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டாா் ஹிரிசங்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.