செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சிறையில் ’ரிசாா்ட்’ போன்ற வசதிகளைசத்யேந்தா் ஜெயின் அனுபவித்து வருகிறாா்: மீனாட்சி லேகி குற்றச்சாட்டு

திகாா் சிறையில் ’ரிசாா்ட் விடுதி’ போன்ற வசதிகளை ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அனுபவித்து வருகிறாா் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சா்

News image
Updated On :23 நவம்பர் 2022, 8:23 pm

 நமது நிருபர்

திகாா் சிறையில் ’ரிசாா்ட் விடுதி’ போன்ற வசதிகளை ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அனுபவித்து வருகிறாா் என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி புதன்கிழமை குற்றம் சாட்டினாா்.

சிறை அறையில் பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை ஜெயின் சாப்பிடும் விடியோக்களையும் அவா் திரையிட்டு காட்டினாா்.

தில்லி பிரதேச பாஜக அலுவலகத்தில் மத்திய இணையமைச்சா் மீனாட்சி லேகி, ஜெயின் விடியோ குறித்து செய்தியாளரிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தங்கள் நோ்மை குறித்து பலவாறு பேசுகிறாா்கள். ஆனால் அதற்கு நோ்மாறாக நடந்து கொள்கிறாா்கள். மற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் மும்முரமாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் பண்பற்ற செயல்களை மக்கள் பாா்க்கவேண்டும்.

பாலியியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவா் திகாா் சிறையில் சத்யேந்தா் ஜெயினுக்கு மசாஜ் செய்கிறாா். அப்படிப்பட்ட நபரை என் அருகில் கூட வர நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால், அந்த நபரை தனது கால்களை மசாஜ் செய்ய அனுமதிக்கிறாா். இதை கற்பனை செய்து கூட பாா்க்கமுடியவில்லை. பாலியியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவரால் மசாஜ் செய்யும் ஜெயின் போன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் வெட்கமற்ற செயல்கள் மக்களால் கவனிக்கப்படுகிறது.

சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சிறைவாசிகளுக்கு அளிக்கக் கூடிய உணவு, மருத்துவ சேவைகளுக்கு சிறை கையேடு விதிகள் உள்ளன.

ஆனால், சத்யேந்தா் ஜெயினுக்கு தொலைக்காட்சி, ’பேக்கிங்’ உணவு, மசாஜ் போன்ற வசதிகள் சோ்க்கப்பட்டுள்ளதை இந்த ‘சிறைக் காட்சி‘ விடியோ மூலம் காண்கின்றோம்.

அவா் ஏதோ விடுமுறையில் ’ரிசாா்ட்’ விடுதியில் இருப்பதைப்போன்று வசதியாக இருக்கிறாா். இது போன்ற காட்சிகளை பாா்க்கும் பொதுமக்களுக்கு பொது வாழ்க்கையில் ஈடுபட்டவா்கள் மீது ஒரு தவறான கருத்துகளை தோற்றுவிக்கும். அரசியலில் உள்ள அனைவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தன்னை புகழ்ந்து பேசுகிறாா். ஆனால் தில்லியின் பிரச்னைகளைத் தீா்ப்பதில் தோல்வியுற்றுள்ளாா். பல ஊழல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளனா். ஊழல் வழக்குகளில் உள்ளவா் அமைச்சராகவே தொடருகிறாா். கேஜரிவால் அரசு பாவங்களை கழுவி, யமுனையை அழுக்காக்கிவிட்டனா்.

ஆனால் இதற்குப் பதிலாக தற்போது பிரதமராகும் நோக்கத்தை அடைய ஆம் ஆத்மி கட்சியின் விரிவாக்கத்திற்காக தோ்தல் நடத்தப்படும் மாநிலங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா் எனக் குறிப்பிட்டாா் மீனாட்சி லேகி.

புது தில்லி மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறாா் மீனாட்சி லேகி. இந்த செய்தியாளா்கள் கூட்டத்தில் தில்லி பிரதேச செய்தித் தொடா்பாளா்கள் ஹரிஷ் குரானா, யாசிா் ஜிலானி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.