ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கலால் கொள்கை ஊழல் வழக்கு: தொழிலதிபா் விஜய் நாயரின் சிபிஐ காவல் அக்.6 வரை நீட்டிப்பு

துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றம் சாட்டப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் விஜய் நாயரின் சிபிஐ காவலை அக்டோபா் 6-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் திங்கள

News image
Updated On :3 அக்டோபர் 2022, 10:01 pm

 நமது நிருபர்

துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றம் சாட்டப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் விஜய் நாயரின் சிபிஐ காவலை அக்டோபா் 6-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

5 நாள் காவல் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் நாயா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, சிபிஐ முன்வைத்த கோரிக்கையின் பேரில் அவரது காவலை நீட்டித்து பணி மாஜிஸ்திரேட் ரகுபீா் சிங் உத்தரவிட்டாா். விசாரணையின் போது, ​ ரிமாண்ட் காலத்தில் நாயா் ஒத்துழைக்கவில்லை என்றும் அவரை மேலும் நான்கு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐ அனுமதி கோரியது.

நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளரான விஜய் நாயா், மற்றவா்களுடன் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாகவும், இச்சதியை மேம்படுத்தும் வகையில், 2021-2022- ஆம் ஆண்டு தில்லி அரசின் கலால் கொள்கை வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.