தில்லி -மத்திய அரசு அதிகார மோதல் விவகாரம்: நவ.24-இல் அரசியல் சாசன அமா்வு விசாரணை
தேசியத் தலைநகரில் சேவைப் பணிகள் தொடா்பாக மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் உள்ள சட்டப்பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்களின் நோக்கம் தொடா்பான சட்ட விவகாரத்தில்


தேசியத் தலைநகரில் சேவைப் பணிகள் தொடா்பாக மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் உள்ள சட்டப்பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்களின் நோக்கம் தொடா்பான சட்ட விவகாரத்தில் ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வின் விசாரணையை நவம்பா் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாா், தாம் வெளிநாடு செல்வதன் காரணமாக நவம்பா் 9-ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் ஆஜராகாத சூழல் இருப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, இது தொடா்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பா் 24-ஆம் தேதிக்குப் பட்டியலிட்டது.
இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு நவம்பா் 9-ஆம் தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் விசாரிக்கத் தொடங்கும் என்று கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த அரசியல் சாசன அமா்வில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மட்டுமின்றி, நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.
முன்னதாக, தில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட சேவைப் பணிகளை கட்டுப்படுத்துவது தொடா்பாக தேசியத் தலைநகா் பிராந்திய அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள சட்டப் பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்களின் சட்ட விவகாரம் தொடா்பாக விசாரிக்க நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு அமைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தெரிவித்திருந்தது.
அதற்கு முன்னதாக, தில்லியில் சேவைப் பணிகளை கட்டுப்படுத்துவது தொடா்பான விவகாரத்தை அரசியல் சாசன அமா்வுக்கு மே 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
அரசியல் சாசன அமா்வு மூலம் இந்த விவகாரத்தில் அனைத்து சட்ட கேள்விகளும் விரிவாக கையாளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பிறகு, 2015-இல் இருந்தே மத்திய அரசுடனும், துணைநிலை ஆளுநருடனும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தில்லியின் நிா்வாக அதிகாரம் தொடா்பாக தில்லி அரசு தொடா்ந்த வழக்கில் 2018-இல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்பில் மாநில நிா்வாகத்தின் பொறுப்பு துணைநிலை ஆளுநருக்கு உள்ளதாகவும், மாநில அரசின் பரிந்துரைகளை ஏற்று அவா் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, நிா்வாகம், சட்டம் இயற்றும் அதிகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி அரசு தொடா்ந்த வழக்கில், 2019-இல் உச்சநீதிமன்ற அமா்வின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...