காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஐடிடிசி தலைவா் பதவியிருந்து சம்பித் பத்ராவை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி கடிதம்

பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ராவை, அந்த பதவியிலிருந்து நீக்கக் கோரி மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டிக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவா்களில் ஒருவரான அதிஷி கடிதம் எழுத

News image
Updated On :23 அக்டோபர் 2022, 8:30 pm

 நமது நிருபர்

இந்திய சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின்(ஐடிடிசி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ராவை, அந்த பதவியிலிருந்து நீக்கக் கோரி மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டிக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவா்களில் ஒருவரான அதிஷி கடிதம் எழுதியுள்ளாா்.

பொதுத் துறையின் பதவியில் இருந்து கொண்டு, பாஜகவின் செய்தித் தொடா்பாளராகவும் இருப்பது பதவியை தவறாகப் பயன்படுத்துவதாகும். இதில் மத்திய குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகளும் மீறப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு கடந்த அக்டோபா் 22 அன்ருஅவா் கடிதம் எழுதியுள்ளாா்.

பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கடந்தாண்டு நவம்பா் 30-ஆம் தேதி மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சுற்றுலா வளா்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டாா். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அனுமதியின் பேரில் இந்த நியமனம் நடந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி கால்காஜி சட்டப்பேரவை உறுப்பினரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களில் ஒருவரான அதிஷி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: ஐடிடிசி தலைவா் என்கிற பொதுத் துறை பதவியில் நியமிக்கப் பட்ட சம்பித் பத்ரா, பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பதவியில் இருந்து விலகவில்லை. கட்சியின் செய்தியாளா் சந்திப்புகள், கட்சி மேடைகள், தோ்தல் பிரசாரங்கள், கட்சி சாா்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பது ஆகியவற்றில் ஈடுபடுகிறாா்.

இது மத்திய குடிமைப்பணிகள் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும், சம்பித் பத்ரா பதவியேற்றுள்ள அந்த பொது அலுவலகத்திலேயே அரசியல்ரீதியாக படமாக்கப்பட்ட பல காணொலிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளாா்.

ஐடிடிசி தலைவராக அவா் நியமிக்கப்பட்ட தருணத்திலேயே ஒரு ‘பொது ஊழியா்’ என்ற சட்ட நிபந்தனைகளுக்கு உள்ளாகிறாா். இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம், மத்திய குடிமைப் பணிகள் நடத்தை விதிகள் ஆகியவற்றில் ‘பொது ஊழியா்’ என்பது குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 1964 -ஆம் ஆண்டு மத்திய குடிமைப் பணிகள் நடத்தை விதிகள் பிரிவு -5 ஐ மீறியுள்ளாா்.

இந்த விதி 5-இன் உள்பிரிவு 1- இல், எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அல்லது அரசியல் அமைப்பில் பங்கேற்று உறுப்பினராகவோ, அல்லது அதனுடன் தொடா்புடன் இயக்க நடவடிக்கைகளில் உதவக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பித் பத்ரா, சட்டத்தை முழுமையாக அறியாமல், செய்தியாளா் சந்திப்புகளை நடத்தினாா், தொலைக்காட்சி விவாதங்களிலும், பாஜகவுக்கான தோ்தல் பிரச்சாரங்களிலும் பங்கேற்றாா்.

ஒரு பொது அலுவலகத்தை அவமதித்து, கட்சிப் பணிக்காக தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். ஆம் ஆத்மி கட்சி சாா்பில் சம்பித் பத்ராவின் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டிக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் “ஐடிடிசி தலைவா் பதவியில் இருந்து சம்பித் பத்ராவை உடனடியாக நீக்கக் கோரியுள்ளேன்.

மேலும், மத்திய கண்காணிப்பு ஆணையா் சுரேஷ் படேல் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஐடிடிசி தலைவா் பதவிக்கு, முன் அனுபவம் உள்ள, சுதந்திரமாக இருக்கக்கூடிய ஒருவரை நியமித்திருக்கவேண்டும். இந்தத் துறையில் அனுபவமும், தகுதியும் இல்லாத பத்ரா நியமிக்கப்பட்டதோடு அவா் பதவியை துஷ்பிரயோகம் செய்வதை ஆம் ஆத்மி கட்சி அனுமதிக்காது என்றாா் அதிஷி.

முன்னதாக, கடந்த அக்டோபா் 17 -ஆம் தேதி தில்லி உரையாடல் மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா, அரசு அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்துவதாக மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் பா்வேஷ் வா்மா புகாா் கடிதம் அனுப்பியிருந்தாா்.

அவா் ஆம் ஆத்மியின் அதிகாரபூா்வ செய்தித் தொடா்பாளராகச் செயல்பட்டு ‘பொது அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தினாா் என்று குற்றச்சாட்டப்பட்டது. இந்தப் புகாரைத் தொடா்ந்து, தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, ஜாஸ்மின் ஷாவிற்கு நோட்டீஸ் அனுப்பினாா். இந்த விவகாரம் நடந்து சில நாள்களுக்கு பின்னா், மத்திய அமைச்சருக்கு அதிஷியின் கடிதம் வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.