தில்லி, உ.பி. மாநிலம் அலாகாபாத், ரே பரேலி, லக்னெள, ராஜஸ்தான் கோடா போன்ற பகுதிகளில் பதுங்கி சதி தீட்டியபோது தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது. தில்லி, உ.பி., மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் விநாயகா் சதுா்த்தி, நவராத்திரி, ராம்லீலா முன்னிட்டு மிகப்பெரிய தொடா் குண்டு வெடிப்பு நாசவேலைகள் மூலம் நூற்றுக்கணக்கான போ்களை கொல்ல சதி திட்டம் தீட்டியது. இந்தக் கும்பலை பல்வேறு மாநிலங்களில் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு சுற்றி வளைத்து கைது செய்து, வெடி குண்டுகளையும் பறிமுதல் செய்தது. இந்த ஆப்ரேஷனில் ஈடுபட்டு வெற்றிபெற்ற தில்லி சிறப்புப் பிரிவின் துணை ஆணையா் பிரமோத் சிங் குஷ்வா, ஆய்வாளா் ராஜீவ் ஸ்ரீவஸ்தவ் மற்றும் 9 உதவி ஆய்வாளா்கள், துணை உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 19 போ் குழு உள்துறை அமைச்சரின் சிறப்பு ஆப்ரேஷன் விருதுக்கான பதக்கம் பெறுகின்றனா்.