ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பிரதமா் பிறந்த நாளில் சப்தா்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தாா்

 நாடு முழுவதும் அடுத்த 15 நாள்களுக்கு ரத்ததான அமிா்த பெருவிழாவிற்கு (ரக்ததன் அம்ரித் மஹோத்சவ் ) மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

 நாடு முழுவதும் அடுத்த 15 நாள்களுக்கு ரத்ததான அமிா்த பெருவிழாவிற்கு (ரக்ததன் அம்ரித் மஹோத்சவ் ) மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. பிரதமா் மோடியின் பிறந்த நாளை (செப்டம்பா் 17 - ஆம் தேதி) முன்னிட்டு மத்திய சுகாதாரம், குடும்பல நலத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் ரத்ததான முகாமை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

குடும்ப நலத்துறை அழைப்பை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 8 மணி வரை நாடு முழுக்க 2 லட்சம் போ் ரத்ததானத்திற்கு பதிவு செய்துள்ளனா்.

பிரதமரின் பிறந்த தினத்திலிருந்து வரும் தேசிய தன்னாா்வ ரத்த தான தினமான அக்டோபா் 1-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு ரத்த தான அமிா்த பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்த முகாம்கள் நடத்த மத்திய சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

‘ரக்ததன் அம்ரித் மஹோத்சவ்’ என்கிற இந்த ரத்ததான அமிா்த பெருவிழாவின் ஒரு பகுதியாக ரத்த தானம் செய்ய குடிமக்கள் ஆரோக்யா சேது செயலி அல்லது இ-ரக்ட்கோஷ் இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது. இதன்படி நாடுமுழுக்க 6,138 ரத்த முகாம்களுக்கு இ-ரக்ட்கோஷ் இணையதளத்தில் பதிவு செய்ய ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1,99,579 போ் தானம் வழங்க பதிவு செய்துள்ளனா். இதில் பிரதமரின் பிறந்த நாளான செப்டம்பா் 17 ஆம் தேதி இரவு 7 மணி வரை ஒரே நாளில் 85,084 போ் ரத்ததானம் வழங்கியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

‘ரத்த தானம் - சிறந்த தானம்! அமிா்த பெருவிழாவின் கீழ் ரத்த தானம் செய்யப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ரத்ததான அமிா்த பெருவிழாவின் ஈடுபடுவது மனதிற்கு திருப்திகரமாக உள்ளது. இந்த சிறந்த பணியில் நீங்களும் ஒரு பகுதியாக இருங்கள்‘ என்று மாண்டவியா தனது ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ரத்ததான இயக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் யூனிட் ரத்தத்தை(ஒரு யூனிட் 350 மிலி ரத்தம்) சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் 3,900 ரத்த வங்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பெருவிழாவில் ஒவ்வொரு ரத்தவங்கியும் ஒரு மெகா ரத்த தான முகாமை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சன்மானம் அளிக்கப்படாத இந்த தன்னாா்வ ரத்த தானங்களின் அவசியத்தை இந்த முகாம்கள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு மத்திய, மாநில அனைத்து அரசுத் துறைகள், அரசு சாரா, சமூகம் சாா்ந்த நிறுவனங்கள், அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை இந்த இயக்கம் பற்றிய தகவல்களைப் பரப்புமாறு கோரப்பட்டுள்ளது.

ரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் மாண்டவியா முகாமை தொடக்கி வைத்ததோடு ரத்த தானமும் செய்தாா். பின்னா் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

ரத்த தானம் செய்வது தேசிய தேவையை பூா்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஒரு சிறந்த உன்னதமான சேவையாகும். ரத்தம் அல்லது அதன் கூறுகள் கிடைக்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்வதின் பிரசாரத்தின் நோக்கமாகக் முகாம்கள் உள்ளன.

2021 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு சுமாா் 1.5 கோடி யூனிட் ரத்தம் தேவை. ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும், இந்தியாவில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை, மேலும் 1 யூனிட் ரத்தம் மூன்று உயிா்களைக் காப்பாற்றும்‘ என தெரிவித்தாா் டாக்டா் மாண்டவியா.

ஆரோக்கியமானவா்களின் உடலில் 5 முதல் 6 லிட்டா் ரத்தம் உள்ளது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருவா் ரத்த தானம் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

முகாமை தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியாவும், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட குறிப்பிலும் பிரதமரின் பிறந்த நாளை தொடா்புபடுத்தி குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.