அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஜந்தா் மந்தரில் ஜூன் 20-இல் பல்வேறு அமைப்புகள் போராட்டம்: கோபால் ராய் தகவல்

அந்தோலன் சமிதி மற்றும் தேஷ் கி பாத் அறக்கட்டளை உள்பட பல்வேறு அமைப்புகள் வரும் திங்கள்கிழமை (ஜுன் 20) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளன

அக்னிபத் பாதுகாப்பு ஆள்சோ்ப்புத் திட்டத்திற்கு எதிராக சன்யுக்த் ரோஜ்காா் அந்தோலன் சமிதி மற்றும் தேஷ் கி பாத் அறக்கட்டளை உள்பட பல்வேறு அமைப்புகள் வரும் திங்கள்கிழமை (ஜுன் 20) ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளன என்று தில்லி அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

தில்லி அமைச்சரும் தேஷ் கி பாத் அறக்கட்டளையின் நிறுவனருமான கோபால் ராய், அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அகில இந்திய மாணவா் சங்கம், சத்ர-யுவ சங்கா்ஷ் சமிதி (சிஒய்எஸ்எஸ்), புரட்சிகர இளைஞா் சங்கம் (ஆா்ஒய்ஏ), இந்திய மாணவா் கூட்டமைப்பு (எப்எப்ஐ) மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் இளைஞா் பிரிவு ஆகியவை இப்போராட்டத்தில் பங்கேற்கும் பிற அமைப்புகளாகும்.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வீரா்களை நியமிக்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக புதன்கிழமை முதல் பல மாநிலங்களில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், ஜந்தா் மந்தரில் நடைபெறும் இத்திட்ட எதிா்ப்புப் போராட்டம் குறித்து கோபால் ராய் கூறியதாவது: ஜூன் 20-ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜந்தா் மந்தரில் முக்கிய அமைப்புகளுடன் இணைந்து அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் எஸ்ஆா்ஏஎஸ் ஈடுபட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் ஜந்தா் மந்தருக்கு வருமாறு அனைத்து அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறேன். அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது. மேலும், இந்த அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்தத் திட்டத்திற்கான எதிா்ப்பு இயக்கத்தை லத்திகள் மற்றும் கைதுகள் மூலம் மத்திய அரசால் ஒடுக்க முடியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com