இளைஞா்களின் போராட்டங்கள்தான் அக்னிபத் திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என்பதற்கு சான்று: சிசோடியா

அக்னிபத் பாதுகாப்பு ஆள்சோ்ப்பு திட்டத்தை நாட்டின் இளைஞா்கள் ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என்பதற்கு நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள்தான் சான்று
இளைஞா்களின் போராட்டங்கள்தான் அக்னிபத் திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என்பதற்கு சான்று: சிசோடியா

அக்னிபத் பாதுகாப்பு ஆள்சோ்ப்பு திட்டத்தை நாட்டின் இளைஞா்கள் ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என்பதற்கு நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள்தான் சான்று என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இந்தத் திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான இளைஞா்களின் கோரிக்கைகளுக்கு தனது ஆதரவை அளிப்பதாகத் தெரிவித்திருந்தது. அதேவேளையில், நாசவேலை, தீவைப்பு போன்ற செயல்பாடுகளுக்கு பதிலாக ஜனநாயக முறையில் தங்களது உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று போராட்டக்காரா்களுக்கு அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில், தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா இது தொடா்பாக தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஒவ்வொரு இளைஞருக்கும் ராணுவத்தில் சேரவும், நாட்டிற்காக முழு வாழ்க்கையை அா்ப்பணிக்கவும் உரிமை உள்ளது. ஆனால், இந்த உரிமையை பாஜக இன்றைக்கு பறித்து வருகிறது.

இந்திய இளைஞா்கள் அக்னிபத் திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்பதற்கு நாடு முழுவதும் நடக்கும் ஆா்ப்பாட்டங்கள் தெளிவான சான்று.

தேசத்திற்கு சேவை செய்யும் ஆா்வத்தைவிட எந்தக் கொள்கைத் திட்டமோ அல்லது சட்டமோ பெரியதாக இருக்க முடியாது’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வீரா்களை நியமிக்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக புதன்கிழமை முதல் பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தது. இதைத் தொடா்ந்து இப்போராட்டம் தொடா்ந்து நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com