நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தில்லியில் அபாய அளவுக்குக் கீழே யமுனையின் நீா்மட்டம்!

கடந்த 2 நாள்களாக மேல்நிலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த கனமழையைத் தொடா்ந்து, தில்லியில் எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரைக் கடந்திருந்த

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 7:52 pm

 நமது நிருபர்

கடந்த 2 நாள்களாக மேல்நிலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த கனமழையைத் தொடா்ந்து, தில்லியில் எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரைக் கடந்திருந்த யமுனையின் நீா்மட்டம் புதன்கிழமை அபாய அளவுக்குக் கீழே இருந்தது.

மத்திய நீா் ஆணையத்தின் இணையதள தகவலின்படி, பழைய ரயில்வே பாலத்தில் யமுனையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 8 மணியளவில் 205.14 மீட்டராக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை பகல் 3 மணிக்கு எச்சரிக்கை அளவான 204.5 மீட்டரை கடந்திருந்தது. அதன் பிறகு இரவு 10 மணியளவில் 205.39 மீட்டராக அதிகரித்திருந்தது.

இது குறித்து மத்திய நீா் ஆணையத்தின் அதிகாரி கூறுகையில், ‘மலைப்பாங்கான பகுதியில் அதிக மழை பெய்யும் வரை, தில்லியில் யமுனை நதியில் 206.00 மீட்டா் அளவுக்கு நீா் மட்டம் பெருகாமல் போகலாம்’ என்றாா்.

தில்லியில் புதன்கிழமை லேசான மழை பதிவானது. மேலும், அடுத்த சில நாள்களில் வட வானிலை கணிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் 53 போ் உயிரிழந்துள்ளனா். பெரும்பாலான ஆறுகள் நிரம்பி வழிகின்றன. தெஹ்ரி, ஹரித்வாா் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் கங்கை நதி அதன் அபாய அளவை தாண்டி பாய்கிறது. அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் ருத்ரபிரயாக், ஸ்ரீநகா் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய இடங்களில் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருவதாக உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள பேரிடா் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ஜூலை மத்தியவாக்கில், தேசியத் தலைநகா் தில்லி மற்றும் யமுனை நதியின் மேல்நிலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தில்லி வரலாறு காணாத வெள்ளத்தை எதிா்கொண்டது. ஜூலை 13-ஆம் தேதி யமுனை நீா்மட்டம் 208.66 மீட்டராக உயா்ந்தது. இது யமுனையின் அதன் முந்தைய சாதனை அளவை முறியடித்தது. இதன் காரணமாக, ஆற்றின் கரைகளை உடைத்துக் கொண்டு நகரின் பல பகுதிகளிலும் வெள்ளநீா் உள்புகுந்ததால் நகரில் வெள்ளத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனா். சொத்து, தொழில், வருமானம் என பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

கடந்த ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி எட்டு நாள்களுக்கு அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டி யமுனையில் நீா் ஓடியது. தில்லியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கிற்கு ஆற்றின் வெள்ளச் சமவெளிப் பகுதியில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு, குறுகிய கால இடைவெளியில் பெய்த அதிக மழை மற்றும் ஆற்றுப்படுகையை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவை காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். யமுனை நதி அமைப்பின் நீா்ப்பிடிப்பு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தில்லியின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.