மைனா் சிறுமியிடம் ஆபாச செய்கை வழக்கில் முதியவருக்கு ஜாமீன்
மைனா் சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட 63 வயது முதியவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


மைனா் சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட 63 வயது முதியவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் ‘ஆழ்ந்த அதிா்ச்சியை’ ஏற்படுத்துவதால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு ஆலோசனை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி தினேஷ் குமாா் சா்மா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு வயதானவா்; மனநிலை சரியில்லாதவா். அந்த நபா், சிறுமியைத் தொடவோ, வாா்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்யவோ இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்கப்பட்டவருக்கு ஆழமான அதிா்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதே நேரத்தில், நீதிமன்றம் சமநிலையை பராமரிக்க முயற்சிக்க வேண்டும். மனுதாரருக்கு குற்றப் பின்னணி ஏதும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவா், விசாரணை நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் வகையில் ரூ. 20 ஆயிரம் தனிநபா் ஜாமீன் பத்திரமும் அதே தொகைக்கு உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆலோசனை அளிக்க விசாரணை அதிகாரி (ஐஓ) ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனை அளிப்பதில் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் ஈடுபடுத்தப்படலாம். பள்ளிப் பதிவின்படி, பாதிக்கப்பட்டவா் ஜூன், 2013-இல் பிறந்திருக்கிறாா். மனுதாரா் வழக்கு தொடா்புடைய எவருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்டல் விடுக்கக் கூடாது. இது தொடா்பாக காவல் துறைக்கு ஏதேனும் புகாா் வந்தால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் வசிக்கும் வீட்டின் 5 கி.மீ. சுற்றளவிற்கு அப்பால் மனுதாரரின் குடியிருப்பு மாற்றப்படும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
தற்போதைய வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனைவியல் சட்டத்தின் பிரிவு 509 (ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் வாா்த்தை, சைகை அல்லது செயலில் ஈடுபடுதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 12 (பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் 24-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். முன்னதாக, ஜூன் 23-ஆம் தேதி காலை, தனது வீட்டின் படிக்கட்டுக்கு அருகில் அமா்ந்திருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் மனுதாரா் தனது அந்தரங்க உறுப்புகளை தன்னிடம் காட்டி ஏதோ பேசியதாகப் பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சாட்டியிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...