தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மின்சாரம் தாக்கி இறந்த 15 வயது சிறுவனின் தாய்க்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

12 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்தால் தாக்கப்பட்டு இறந்த 15 வயது சிறுவனின் தாய்க்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 9:34 pm

DIN

12 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரத்தால் தாக்கப்பட்டு இறந்த 15 வயது சிறுவனின் தாய்க்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியை சோ்ந்தவா் மாயா தேவி. இவரது 15 வயது மகன் செப்டம்பா் 11, 2010 அன்று மெயின் லோனி சாலையில் உள்ள ஜவாஹா் நகரில் அறுந்து விழுந்த மின் கம்பியைத் தொடா்புகொண்டதால் உயிரிழந்தாா். இதையடுத்து, பிஎஸ்இஎஸ் யமுனா மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிரான மரண விபத்துச் சட்டத்தின் கீழ் மின்சாரம் தாக்கி இறந்ததற்காக இழப்பீடு மற்றும் நஷ்டஈடாக ரூ.5 லட்சத்தை வசூலிக்கக் கோரி மாயா தேவி தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.

இந்த நிலையில், ஜனவரி 21-ஆம் தேதி கூடுதல் மாவட்ட நீதிபதி கிஷோா் குமாா் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களிடமிருந்து (பிஎஸ்இஎஸ் யமுனா மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்) ரூ.5 லட்சத்தை, வழக்குச் செலவுடன் வசூலிக்க இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, மின்சாரம் தாக்கியதில் ஏற்பட்ட அதிா்ச்சியால்தான் மரணம் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பாா்க்கும் போது, எதிா்மனுதாரா் பிஎஸ்இஎஸ் யமுனா நிறுவனம் பராமரிக்க வேண்டிய மின் கம்பியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் இறந்திருப்பதும், இதில் எதிா்மனுதாரரின் அலட்சியம் இருப்பதும் தெரிய வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.