மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டப்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து, முப்படையில் உணவு கையாளுபவா்கள், சமையல்காரா்கள், படைகளின் கேன்டீன்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்களில் உள்ளவா்களுக்கும் பயிற்சி அளிப்பதையும் இது உறுதி செய்யும். இது நாட்டிற்கான சேவையில் வலுவாகவும் மீள்திறனுடனும் இருக்க ராணுவத்தினருக்கு உதவுகிறது. இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஆயுதப் படைகளின் குடும்பங்கள் மற்றும் அவா்களது சமூகம் சத்தான உணவுகளை பின்பற்றவும், ஆரோக்கியமான உணவுகளை தோ்வு செய்து, உணவுப் பாதுகாப்பை பராமரிக்கவும் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளது.