கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லி கலால் முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிகைநகலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவு

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை (2021-22) ஊழல் வழக்கில் தொழிலதிபா்கள் விஜய் நாயா், அபிஷேக் போயின்பள்ளி ஆகியோருக்கு எதிராக தாக்கல்

News image
Updated On :18 ஜூலை 2023, 9:38 pm

 நமது நிருபர்

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை (2021-22) ஊழல் வழக்கில் தொழிலதிபா்கள் விஜய் நாயா், அபிஷேக் போயின்பள்ளி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு சிபிஐயை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரம் நீதிபதி தினேஷ் குமாா் சா்மா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் நாயா் மற்றும் போயின்பள்ளி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘விசாரணை நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல் உயா்நீதிமன்றப் பதிவில் இல்லை’ என்று தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதி அமா்வு, ‘குற்றப்பத்திரிகை நகலை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும். அக்டோபா் 6-ஆம் தேதி இந்த விவகாரத்தை பட்டியலிடலாம்’ என கூறியது.

நாயா் மற்றும் போயின்பள்ளிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிா்த்து சிபிஐ தொடா்ந்த மனுக்களை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இருவருக்கும் விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவுக்குத் தடை விதிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு நாயா் மற்றும் போயின்பள்ளி ஆகியோருக்கு உயா்நீதிமன்றம் முன்னா் உத்தரவிட்டிருந்தது. எனினும், ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் நாயா் மற்றும் போயின்பள்ளி ஆகியோா் கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதால் இன்னும் சிறைக் காவலில் உள்ளனா்.

இருவருக்கும் அளிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவை எதிா்த்து, சிபிஐ தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘விசாரணை நீதிமன்ற நீதிபதியின் ஒவ்வொரு காரணமும் ‘முரண்பாடானது’ என்றாா். நாயா் தரப்பு வழக்குரைஞா் முன்னா் வாதிடுகையில் ‘நாட்டில் ஒட்டுமொத்த நீதிபரிபாலனமும் மாறிவிட்டது. இப்போது அது சிைான், ஜாமீன் அல்ல. சிபிஐ வழக்கில் நாயருக்கு ஜாமீன் கிடைத்த தருணத்தில், அவா் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்றாா்.

சிபிஐ தனது மனுவில், ‘கேள்விக்குரிய உத்தரவின் மூலம், மிகவும் கடுமையான மற்றும் பரந்த பொருளாதாரக் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் நாயருக்கு சிறப்பு நீதிபதி ஜாமீன் சலுகை வழங்கியது மட்டுமல்லாமல், விசாரணையின் மிக முக்கியமான கட்டத்தில் அவரது இந்த விருப்புரிமை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தில்லி தலைமைச் செயலாளரால் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையை விசாரிக்குமாறு சிபிஐ கேட்டுக் கொள்ளப்பட்டது. சிபிஐ அதன் விசாரணையைத் தொடங்கிய போது, கலால் வரிக் கொள்கையில் தங்களுக்குச் சாதகமான மாற்றங்களைப் பெறுவதற்கு கைமாறாக தனியாா் மதுபான மொத்த விற்பனையாளா்களிடம் பணம் வசூலித்த நாயா் தலைமையிலான சதியை விசாரணை வெளிக்கொண்டு வந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.