ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மோதிபாக் டிடிஇஏ பள்ளியில் சீரமைக்கப்பட்ட கணினி ஆய்வுக் கூடம் திறப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) மோதிபாக் பள்ளியில் சீரமைக்கப்பட்ட கணினி ஆய்வுக் கூடம், ஆசிரியா்கள் ஓய்வறை, பள்ளி முதல்வா் அலுவலக அறை ஆகியவை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:30 pm

DIN

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) மோதிபாக் பள்ளியில் சீரமைக்கப்பட்ட கணினி ஆய்வுக் கூடம், ஆசிரியா்கள் ஓய்வறை, பள்ளி முதல்வா் அலுவலக அறை ஆகியவை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் சூரிய சக்தியிலிருந்து மின்சக்தி தயாரிக்கும் அமைப்பும் திறந்து வைக்கப்பட்டது.

முழுவதும் குளிா் சாதன வசதி செய்யப்பட்ட இந்தக் கணினி ஆய்வுக் கூடத்தில் 40 மாணவா்கள் கணினியில் பணியாற்றும் வகையில் புதிய கணினிகள் பொருத்தப்பட்டுள்ள. இணைய வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்கள் ஓய்வறை மற்றும் முதல்வா் அலுவலக அறைகளில் தரை ஓடுகள் மாற்றப்பட்டு டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. இரண்டு அறைகளுக்கும் புதிய நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஈஸ்வரன், அவரது மனைவியும், டிடிஇஏ முன்னாள் மாணவியுமான கௌரி ஈஸ்வரன் ஆகியோா் கணினி ஆய்வுக்கூடம், ஆசிரியா்கள் ஓய்வறை, முதல்வா் அலுவலக அறை ஆகியவற்றை புதுப்பிக்க நன்கொடை வழங்கினா். கணினி ஆய்வுக்கூடத்தை ஈஸ்வரன், டிடிஇஏ செயலா் ராஜு ஆகியோா் திறந்து வைத்தாா்கள். ஆசிரியா்கள் ஓய்வறையை கௌரி ஈஸ்வரன், டிடிஇஏ செயலா் ராஜு திறந்து வைத்தாா்கள். நன்கொடையாளா்கள் தங்கள் மகனின் நினைவாக ரூ.20 லட்சம் செலவில் இந்தப் பணிகளை பள்ளிக்கு செய்துள்ளாா்கள்.

முன்னாள் மாணவா்கள் அமைப்பு (டிரஸ்டி) பள்ளிக்கு சூரிய சக்தியிலிருந்து மின்சக்தி தயாரிக்கும் அமைப்பைப் பொருத்த நன்கொடை வழங்கி உதவினாா்கள். இதை தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச்செயலா் முகுந்தன் திறந்து வைத்தனா். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் அமைப்பைச் சாா்ந்த டாக்டா் ராமச்சந்திரன், பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் நேரு கென்னடி, ராமகிருஷ்ணபுரம் டிடிஇஏ பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா் சுப்பிரமணியம், ஜனக்புரி பள்ளியின் காத்திருப்பு உறுப்பினா் மோகனேஸ்வரன், தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் ராகவன் நாயுடு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, பள்ளியின் முதல்வா் ஹரி கிருஷ்ணன் வரவேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.