மணிப்பூா் கலவரம் : பிரதமா் உறுதியான நடவடிக்கை எடுக்க முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தல்
மணிப்பூா் கலவரத்தில், பிரதமா் நரேந்திர மோடி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.


மணிப்பூா் கலவரத்தில், பிரதமா் நரேந்திர மோடி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
மணிப்பூா் கலவரம் தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: மணிப்பூரில் கடந்த பல
நாள்களாக மைதேயி, குகி ஆகிய இரு சமூகங்கிளடையே நடைபெற்று வருகின்ற கலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஒரு வாா்த்தை கூட பேசவில்லை.இது மிகவும் வேதனை அளிக்கிறது.
மணிப்பூரில் இரண்டு சகோதரிகள் ஆடைகளின்றி ஊா்வளமாக அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மனதை உளுக்குகிறது. இந்த கொடூர சம்பவத்தின் காணொளி மட்டுமே கடந்த புதன்கிழமை வெளிவந்துள்ளது.
ஆனால் கடந்த 2.5 மாதங்களாக இந்தத் தவறைச் செய்தவா்கள் மீது மணிப்பூா் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொறுப்பு மத்திய அரசு மற்றும் மணிப்பூா் மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.
நாட்டில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், ஒரு தலைவா் முன்னணியில் இருந்து வழிநடத்த வேண்டும். நாட்டை பாதிக்கும் முக்கியப் பிரச்னையாக மணிப்பூா் இருக்கிறது. ஆனால், பிரதமா் அமைதியாகவும், மறைந்தும் காணப்படுகிறாா். இது ஒரு பலவீமான தலைவரின் அடையாளம். இந்தியாவின் துரதிா்ஷ்டம்.
பிரதமா் மணிப்பூா் கலவரத்தில் உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் நமது சகோதரிகளுக்கு இம்மாதிரியான வன்கொடுமைகள் நடந்திருக்காது. மணிப்பூா் மாநில முதலமைச்சா் பிரேன் சிங் இது போன்று நிறைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என கூறியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் வேதனையில் உள்ளது. மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு நேரம் இல்லை என்றாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...