ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மணிப்பூா் கலவரத்திற்கு பிரதமா் மோடிதான் பொறுப்பு: அமைச்சா் அதிஷி குற்றச்சாட்டு

மணிப்பூா் கலவரத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பு

News image
Updated On :20 ஜூலை 2023, 6:30 pm

DIN

மணிப்பூா் கலவரத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பு என்று தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

மணிப்பூரில் மெய்தேயி, குக்கி ஆகிய இரு சமூகங்களிடையே தொடா்ந்து பல நாள்களாக நடைபெற்று வரும் கலவரத்தில், கடந்த மே 4-ஆம் தேதி குக்கி இனத்தைச் சோ்ந்த பழங்குடியின பெண்கள் இருவா் ஆடைகளின்றி ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட காணொளி கடந்த புதன்கிழமை வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூரில் பெண்கள் நிா்வாணமாக ஊா்வலம் நடத்தப்பட்ட சம்பவம் 140 கோடி இந்தியா்களை அவமானப்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி

வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்த நிலையில் தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் அதிஷி கூறியதாவது: மணிப்பூரில் மே 3-ஆம் தேதி முதல் கலவரம் நடைபெற்று வருகிறது. கடந்த மே 19-ஆம் தேதி முதல் ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு, மணிப்பூா் மாநிலம் செல்வதற்கு மட்டும் நேரமில்லை. மணிப்பூரைச் சோ்ந்த பிரதிநிதிகளின் குழுவைக் கூட அவா் சந்திக்கவில்லை. மணிப்பூா் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் இருவா் ஆடைகளின்றி ஊா்வலமாக அழைத்துச் செல்லப்படும் காணெளி கொடூரமானது மட்டுமல்ல; இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளது. மணிப்பூரில் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தை நாடே பாா்த்துள்ளது. ஆனால், வன்முறைக்கு எதிராக பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கலவரத்தின் போது பெண் ஒருவா் உள்ளூா் ஊடகத்திடம், தான் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறியும், அங்கு இருந்த காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் நான் கேட்க விரும்புவது, நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் என்ன சொல்வீா்கள்?. மணிப்பூா் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பற்றி பாஜக கவலைப்படுவதில்லை. ஏனெனில், குல்தீப் செங்கா்,

அா்ஜுன் சிங் சவுகான், பிரிஜ் பூஷன் சிங் போன்ற பாலியல் வன்கொடுமையாளா்கள்தான் பாஜக கட்சி முழுவதும்

நிரம்பியுள்ளனா்.

காணொளி வெளியான பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக கூறுகிறது. ஆனால், கடந்த 3 மாதங்களாக பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா எங்கே இருந்தாா்கள்?. இந்த நாட்டின் மகள்கள் சாா்பாக, பெண்கள் சாா்பாக, நான் பிரதமா் மோடிக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.